Site icon Automobile Tamil

ஹோண்டாவின் டபிள்யூ ஆர்-வி, சிட்டி மற்றும் பிஆர்-வி வெளியீடு

இந்தியாவில், ஹோண்டா கார்ஸ் இந்தியா, தனது ஸ்பெஷல் எடிசன் கார்களான டபிள்யூ ஆர்-வி, அலைவ் மற்றும் பிஆர்-வி ஸ்டைல் எடிசன் கார்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ஹோண்டா சிட்டி எட்ஜ் எடிசன்: ஹோண்டா நிறுவனம் சிட்டி எட்ஜ் எடிசன் கார்களை, பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகைகளில், அவற்றின் விலை முறையே 9.75 லட்சம் மற்றும் 11.10 லட்சம் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசன் எஸ்வி டிரிம் மற்றும் 15 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் கேமிரா மற்றும் ஸ்பெஷல் எடிசன் எம்பளத்துடனும், பிரீமியம் வசதியாக, குரூஸ் கண்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, டிரைவர் சீட் உயரத்தை மாற்றும் வசதி மற்றும் எஸ்ஆர்எஸ் ஏர்பேக் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

ஹோண்டாவின் எஸ் வெர்சன் கார்களை அடிப்படையாக கொண்ட ஹோண்டா டபிள்யூ ஆர்-வி, அலைவ் எடிசன் கார்களின் பெட்ரோல் வெர்சன் விலை 8.02 லட்ச ரூபாய் விலையிலும், டீசல் வெர்சன் 9.11 லட்ச ரூபாய் விலையிலும் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) விற்பனை வந்துள்ளது. இந்த கார்களில், வாடிக்கையாளர்களை கவரும் வகையிலான 16 இன்ச் டைமண்ட் கட் வீல்கள், ரியர் பார்க்கிங் சென்சார்ஸ், ரியர் கேமிராவுடன் கூடிய டிஸ்பிளே, பிரீமியம் சீட் கவருடன் கூடிய ஸ்பெஷல் லோகோ, பிரீமியம் ஸ்டியரிங் கவர், ஒருமாதம் இலவச ஹோண்டா கனெக்ட் சஸ்கிரிப்சனையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

ஹோண்டா பிஆர்-வி ஸ்டைல் எடிசன் இ டிரிம் பேஸ், ஸ்டைலான ஸ்பெஷல் எடிசன் எம்பளம், பிராண்ட் கார்டு, டைல்கேட் ஸ்பாயிலர், பாடி சைட் மோல்டிங் மற்றும் பிராண்ட் மற்றும் ரியர் பம்பர் புரோடைக்டர், டெல்லியில் எக்ஸ் ஷோரூம் விலையிலேயே விற்பனை செய்யப்பட உள்ளது என்று ஹோண்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

Exit mobile version