6 & 7 இருக்கையில் ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி டீசர் வெளியானது

7dde8 hyundai alcazar teased

5 இருக்கை கிரெட்டா காரின் அடிப்படையிலான 6 மற்றும் 7 இருக்கை பெற்றதாக ஹூண்டாய் அல்கசார் எஸ்யூவி என்ற பெயரில் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் முதல் டீசர் மற்றும் பெயர் வெளியாகியுள்ளது.

இந்தியா மற்றும் தென் கொரியாவில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டு வரும் கிரெட்டா அடிப்படையிலான 7 சீட்டர் எஸ்யூவி காரின் பெயர் Alcazar என சூட்டப்பட்டுள்ளது. Alcazar என்பதற்கு பொருள் Moorish castle or palace தமிழில் மூரிஷ் கோட்டை அல்லது அரண்மனை என்பது பொருளாகும்.

அல்கசார் எஸ்யூவி டீசர்

சர்வதேச அளவில் புதிய ஹூண்டாய் அல்கசார் விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் இந்த மாடலை பெறும் முதல் சந்தையாக இந்தியா விளங்க உள்ளது.  ஹூண்டாய் இந்த காரை பற்றி கூறுகையில் புதிய 7 இருக்கைகள் கொண்ட எஸ்யூவி உத்வேகம், விசாலமான இடவசதி மற்றும் உறுதியான கட்டுமானத்தை குறிக்கிறது. புதிய அல்கசார் “அதிநவீன, புதுமையான மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் என குறிப்பிட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குநர் எஸ்.எஸ் கிம் கூறுகையில், புதிய தலைமுறை கார் வாங்குபவர்களின் தேவைகளையும் மற்றும் வாடிக்கையாளர் மகிழ்ச்சியை உறுதி செய்ப்படும். ஹூண்டாய் இந்திய நாட்டில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ஹூண்டாய் அல்காசரின் உலகளாவிய அறிமுகத்துடன் இந்திய வாடிக்கையாளர்களுக்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவோம், அது ‘இந்தியாவில் தயாரிக்கப்பட்டது’ மற்றும்  மேட் ஃபார் இந்தியா எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற ஹூண்டாய் நிறுவன மாடல்களிலே அதிகப்படியான வசதிகளை அல்கசாரில் இடம்பெற வாய்ப்புகள் உள்ளது. குறிப்பாக ADAS தொழில்நுட்பம் இதனை வெளிநாடுகளில் ஹூண்டாய் ஸ்மார்ட்சென்ஸ் என குறிப்பிடுகின்றது.

ஃபார்வர்ட் மோதல் தடுக்க தானியங்கி அவசரகால பிரேக்கிங் தொழில்நுட்பம், பிளைன்ட் ஸ்பாட் மோதல் தவிர்ப்பு உதவி, ரிவர்ஸ் மாறும்போது தானியங்கி அவசரகால பிரேக்கிங் மற்றும் பின்புற போக்குவரத்து எச்சரிக்கை போன்ற ஹூண்டாய் ஸ்மார்ட் சென்ஸ் அம்சங்களில் இடம்பெற்றிருக்கலாம்.

அல்கசார் போட்டியாளர்கள் யார் ?

மஹிந்திரா எக்ஸ்யூவி 500, எம்ஜி ஹெக்டர் பிளஸ், வரவிருக்கும் டாடா கிராவிட்டாஸ் மற்றும் காம்பஸ் 7 இருக்கை ஆகியவற்றை எதிர்கொள்ள உள்ள ஹூண்டாய் அல்கசார் விலை ரூ.12 லட்சம் முதல் துவங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது.  அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

Share
Published by
MR.Durai