Automobile Tamilan

ஹூண்டாய் ஆரா காரின் டிசைன் படங்கள் வெளியீடு

Hyundai Aura car Design

வரும் டிசம்பர் 19 ஆம் தேதி வெளியாக உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய செடான் மாடலான ஆரா காரின் வடிவமைப்பு படங்களை முதன்முறையாக அதிகார்ப்பூர்வமாக ஹூண்டாய் இந்தியா வெளியிட்டுள்ளது.

பிஎஸ்6 என்ஜின் பெற்றதாக விற்பனைக்கு வரவுள்ள ஹூண்டாய் ஆரா காரில் மூன்று என்ஜின்கள் பொருத்தப்பட உள்ளன. 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்கள் இடம் பெறவுள்ளது.

பிஎஸ் 4 ஆதரவில் கிடைக்கின்ற என்ஜின் அடிப்படையில், 1.2 பெட்ரோல் 83 ஹெச்பி மற்றும் 114 என்எம் உற்பத்தி செய்கிறது. 1.2 டீசல் 75 ஹெச்பி மற்றும் 190 என்எம் உற்பத்தி செய்கிறது. எனவே பிஎஸ் 6-இணக்கமான பதிப்புகள் ஏறக்குறைய ஒரே சக்தி மற்றும் இழுவை திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

மேலே, வழங்கப்பட்டுள்ள இரு என்ஜின்களிலும் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது.

பிஎஸ்-6 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் முன்பாக ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரா செடானில் பொருத்தப்படும் போது பவர் குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது. 20 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் கப்பா T-GDI என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

விற்பனைக்கு கிடைத்து வருகின்ற புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் முன்புற தோற்ற உந்துதலை பெற்று சற்று குறைவான மாற்றங்களை மட்டும் புதிய ஆரா கார் பெற்றிருக்க வாய்ப்புகள் உள்ளது. மற்றபடி கூடுதலாக இணைக்கப்பட்ட பூட் பகுதியில் அமைந்துள்ள பம்பரில் சிறிய மாற்றங்கள் மற்றும் நம்பர் பிளேட் அமைப்பு நேரத்தியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அடுத்தப்படியாக, ஸ்போர்ட்டிவ் லுக்கை வெளிப்படுத்தும் நோக்கில் பி மற்றும் சி பில்லர்களில் கருப்பு நிற பூச்சூ இணைக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை, தொடர்ந்து ஐ10 நியோஸ் போன்றே அமைந்திருப்பதுடன் டாப் வேரியண்டுகளில் 8.0 அங்குல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆப்பிள் கார் ப்ளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வதிகளுடன் கூடிய பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ப்ளூலிங்க் டெக்னாலாஜி பெற வாய்ப்புள்ளது.

 

Exit mobile version