Automobile Tamilan

ஸ்டைலிஷான புதிய ஹூண்டாய் ஆரா அறிமுகமானது

hyundai aura

விற்பனையில் கிடைத்து வருகின்ற எக்ஸென்ட் காருக்கு மாற்றாக புதிய ஹூண்டாய் ஆரா செடான் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

விற்பனைக்கு கிடைத்து வருகின்ற புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரின் முன்புற தோற்ற உந்துதலை பெற்று சற்று குறைவான மாற்றங்களை மட்டும் புதிய ஆரா கார் பெற்றிருக்கின்றது. பக்கவாட்டு அமைப்பில் மிக நேர்த்தியான டைமன்ட் கட் அலாய் வீல் சி பில்லர் பகுதியில் சற்றும் மேல் எழும்பிய வகையில் அமைந்து அதில் கருப்பு நிறம் சேர்க்கபட்டுள்ளது.

இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை, தொடர்ந்து ஐ10 நியோஸ் போன்றே அமைந்திருப்பதுடன் டாப் வேரியண்டுகளில் ஆர்கேமிஸ் ஆடியோ சிஸ்டம், 5.3 அங்குல டிஜிட்டல் கிளஸ்ட்டர், சென்டரல் கன்சோலில் 8.0 அங்குல் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்று ஆப்பிள் கார் ப்ளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வதிகளுடன் கூடிய பல்வேறு கனெக்ட்டிவிட்டி வசதிகளை வழங்கும் ப்ளூலிங்க் டெக்னாலாஜிக்கு மாற்றாக ஐப்ளூ ஆடியோ ஸ்மார்ட் ஆப் வசதியை பெற்றிருக்கின்றது.

ஹூண்டாயின் புதிய ஆரா காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஏற்ற மூன்று விதமான என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. அவை, 1.2 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல், 1.2 லிட்டர் மூன்று சிலிண்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகும்.

1.2 பெட்ரோல் 83 ஹெச்பி மற்றும் 114 என்எம் உற்பத்தி செய்கிறது. இந்த என்ஜின் சிஎன்ஜி வகையில் வரும்போது 72 ஹெச்பி மற்றும் 101 என்எம் டார்க் உற்பத்தி செய்யவல்லதாகும்.  இதில் வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஸ்மார்ட் ஆட்டோ ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது. சிஎன்ஜி மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் கிடைக்கும்.

1.2 டீசல் ஈக்கோ டார்க் என்ஜின் 75 ஹெச்பி மற்றும் 190 என்எம் உற்பத்தி செய்கிறது. இதில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட உள்ளது.

பிஎஸ்-6 ஆதரவை பெற்ற 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் முன்பாக ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரா செடானில் பொருத்தப்பட்டுள்ளது. 100 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும்  இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

ஹூண்டாய் ஆரா 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும், மாருதி டிசைர், ஹோண்டா அமேஸ் மற்றும் ஃபோர்டு ஆஸ்பயர் போன்ற செடான்களுக்கு போட்டியாக விளங்கும்.

Exit mobile version