ஹூண்டாய் க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் விற்பனைக்கு வெளியானது

0

இந்தியாவில் பிரத்தி பெற்று விளங்கும் எஸ்யூவி ரக மாடல்களில் ஒன்றான ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி ரக மாடலின் மேம்படுத்தப்பட்ட க்ரெட்டா ரூ.9.44 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

2018 ஹூண்டாய் க்ரெட்டா

முந்தைய பெட்ரோல் மாடலை விட ரூ. 15,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் டாப் வேரியன்ட் மாடல் அதிகபட்சமாக ரூ.57,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல டீசல் மாடலின் பேஸ் வேரியன்ட் விலை உயர்த்தப்படாமல் டாப் வேரியன்ட் அதிகபட்சமாக ரூ. 44,000 வரை விலை உயர்ந்துள்ளது.

புதிய க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதிய கிரில் பெற்றதாக விளங்குகின்றது. புதிய புராஜெக்டர் ஹெட்லைட் , எல்இடி ரன்னிங் விளக்குடன், புதுப்பிக்கப்பட்ட முன் மற்றும் பின் பம்பர், புதுவிதமான 17 அங்குல அலாய் வீல் கொண்டதாக வந்துள்ளது. க்ரெட்டாவில் வெள்ளை, ஆரஞ்சு, சில்வர், கருப்பு , நீலம் மற்றும் சிவப்பு நிறத்துடன் இரட்டை டோன் கொண்டதாக வெள்ளை மற்றும் பிளாக் , ஆரஞ்சு மற்றும் பிளாக் ஆகிய நிறங்களை பெற்றுள்ளது.

7 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் கூடிய ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட அம்சங்களை கொண்டதாக வந்துள்ளது. ரியர் பார்க்கிங் சென்சார், ஸ்மார்ட் கீ பேன்ட், ARKAMYS சவுன்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் சன்ரூஃப் ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ளது.

புதிய க்ரெட்டா மாடலில் முந்தைய எஞ்சினில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை, 1.6 லிட்டர் பெட்ரோல், 1.6 லிட்டர் டீசல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் ஆகிய மூன்று விதமான எஞ்சின் தேர்வுகளில் கிடைக்க உள்ளது. 90 ஹெச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் வழங்கும் மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அடுத்து 1.6 லிட்டர் பெட்ரோல் 123 ஹெச்பி ஆற்றல் மற்றும் 151 என்எம் டார்க் வெளிப்படுத்தும். 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் 128 ஹெச்பி ஆற்றல் மற்றும் 260 என்எம் டார்க்கினை வழங்குகின்றது. இரண்டிலும் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஹூண்டாய் க்ரெட்டா விலை பட்டியல்

Variants எஞ்சின் விலை விபரம்
Hyundai Creta E 1.6 Petrol ₹ 9,43,908
Hyundai Creta E+ 1.6 Petrol ₹ 9,99,900
Hyundai Creta SX Dual Tone 1.6 Petrol ₹ 12,43,934
Hyundai Creta SX AT 1.6 Petrol ₹ 13,43,834
Hyundai Creta SX (O) 1.6 Petrol ₹ 13,59,948
Hyundai Creta E+ 1.4 Diesel ₹ 9,99,900
Hyundai Creta S 1.4 Diesel ₹ 11,73,893
Hyundai Creta S AT 1.6 Diesel ₹ 13,19,934
Hyundai Creta SX 1.6 Diesel ₹ 13,23,934
Hyundai Creta SX Dual Tone 1.6 Diesel ₹ 13,73,934
Hyundai Creta SX AT 1.6 Diesel ₹ 14,83,934
Hyundai Creta SX (O) 1.6 Diesel ₹ 15,03,934

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ், ஹெக்ஸா, டஸ்ட்டர் , டெரானோ மற்றும் பிஆர்-வி ஆகியவற்றை புதிய க்ரெட்டா விற்பனைக்கு வந்துள்ளது.