ரூ.7.68 லட்சத்தில் ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ விற்பனைக்கு வெளியானது

0

grand i10 nios turbo

விற்பனையில் உள்ள ஸ்போரட்ஸ் வேரியண்டில் இடம்பெற்றுள்ள டர்போ என்ஜினை கொண்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் 1.0 டர்போ மாடல் விலை ரூ.7.68 லட்சம் என நிர்ணையிக்கப்பட்டுள்ளது. டூயல் டோன் பெற்ற மாடல் விலை ரூ.5,000 வரை கூடுதலாக உள்ளது.

Google News

பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு ஆதரவான 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் முன்பாக ஹூண்டாய் வென்யூ எஸ்யூவி காரில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. ஆரா செடானில் பொருத்தப்பட்டுள்ளது. தற்போது ஐ10 நியோஸில் 100 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்துகிறது.  இந்த என்ஜினில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் லிட்டருக்கு 20.5 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விற்பனையில் கிடைக்கின்ற மாடல்களில் இருந்து வித்தியாசத்தை டர்போ பெற்றுள்ளது. குறிப்பாக கருமை நிறத்திலான ஃபினிஷ் செய்யப்பட்ட கிரில் மற்றும் டர்போ பேட்ஜிங் மற்றும் கருப்பு நிற மேற்கூறையை பெற்றள்ளது. இன்டிரியரை பொறுத்தவரை கருப்பு நிறத்திலான இருக்கை கொடுக்கப்பட்டு சிவப்பு நிறத்திலான ஸ்டிச்சிங் செய்யப்பட்டுள்ளது

முதன்முறையாக ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு கொண்டு வரப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் டர்போ தற்போது விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. இந்த கார் ரூ.5.04 லட்சம் முதல் ரூ.8.04 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகின்றது.