2018 ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விற்பனைக்கு வந்தது – ஆட்டோ எக்ஸ்போ 2018

0

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட், இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட பல்வேறு வசதிகளை 2018 ஹூண்டாய் எலைட் ஐ20 பேஸ்லிப்ட் காரை ரூ.5.34 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது.

2018 ஹூண்டாய் எலைட் ஐ20

கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2018 வாகன கண்காட்சியில் , அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள எலைட் ஐ20 மிக நேர்த்தியான கட்டுமானத்துடன் பல்வேறு வசதிகள் இணைக்கப்பட்டுமிக அழகாக காட்சியிளக்கின்றது.

புதிய எலைட் ஐ20 காரின் முகப்பு தோற்ற அமைப்பில் முந்தைய மாடலை போல இரு பிரிவு கிரிலுக்கு மாற்றாக ஒற்றை கருப்பு நிற கேஸ்கேடிங் கிரில் பெற்று எல்இடி ரன்னிங் விளக்குகளை பெற்ற ஹெட்லேம்ப் மற்றும் புதுப்பிக்கப்பட்ட டெயில் விளக்கு ஆகியவற்றுடன் புதிய பின்புற பம்பரை பெற்றதாக வந்துள்ளது.

ஸ்டைலிஷான டைமன்ட் கட் அலாய் வீலுடன் புதிதாக ஆரஞ்சு நிறத்தை பெற்றதாக வந்துள்ள புதிய மாடலில் கூடுதலாக இன்டிரியர் அமைப்பில் புதுகப்பிக்கப்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் கிளஸ்ட்டர், கன்சோலில் அமைந்துள்ள தொடுதிரை அமைப்பில் ஆண்ட்ராய்ட்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே ஆகியவற்றை பெற்றுள்ளது.

எலைட் i20 காரில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வந்த எஞ்சினில் எந்த மாற்றங்களும் இல்லாமல், 82 bhp பவர் வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா VTVT  பெட்ரோல் எஞ்சின் மாடலில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. அதேபோல 89 bhp பவர் வெளிப்பதுத்தும் 1.4 லிட்டர் U2 CRDI எஞ்சின் மாடலில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

இவற்றைத் தவிர புதியதாக  99 bhp பவர் வெளிப்படுத்தும் 1.4-litre டுயல் VTVT  எஞ்சின் மாடலில் 4 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

2018 ஹூண்டாய் எலைட் ஐ20 கார் விலை பட்டியல்

2018 Elite i20 Variant-wise prices (ex-showroom, Delhi)
PetrolDiesel
EraRs 5.34 lakhRs 6.73 lakh
Magna EraRs 6.00 lakhRs 7.31 lakh
SportsRs 6.59 lakhRs 7.83 lakh
AstaRs 7.12 lakhRs 8.36 lakh
Asta (O)Rs 7.91 lakhRs 9.16 lakh

 

Comments