Site icon Automobile Tamil

இந்தியாவில் 27-வது ஆண்டு இலவச கார் கேர் கிளினிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: ஹூண்டாய் இந்தியா

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் “ப்ரீ கார் கேர் கிளினிக்”, இந்தியாவில் கடந்த 21ம் தேதி தொடங்கியது. ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட 1,309 டீலர்ஷிப்கள் மற்றும் சர்விஸ் பாயிண்ட்களை நடக்கும் இந்த “ப்ரீ கார் கேர் கிளினிக்” வரும் 27ம் தேதி வரை நடக்க உள்ளது.

இந்த “ப்ரீ கார் கேர் கிளினிக்”-கில் ஹூண்டாய் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு 50-பாயிண்ட் செக்-ஆப் போன்ற பல ஆப்பர்களை பெறலாம். மேலும் சில பார்ட்ஸ்களை மாற்றும் போது 30 சதவிகிதம் வரை லேபர் கட்டணத்தில் டிஸ்கவுண்ட் பெறலாம். ஆண்டுதோறும் 10 ப்ரீ எக்டேண்டட் வாரண்டி மற்றும் பல கவர்ந்திழுக்கும் ஆப்பர்களும் பெறலாம். இதுமட்டுமின்றி, ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களும், இந்தியாவில் உள்ள 400-க்கு மேற்பட்ட ஒர்க் ஷாப்களில் கூடுதலாக 360 டிஜிட்டல் சர்விஸ் அனுபவத்தை பெறலாம்.

இந்த “ப்ரீ கார் கேர் கிளினிக்” குறித்து பேசிய ஹூண்டாய் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவன உயர் அதிகாரி புன்னைவனம் தெரிவிக்கையில். வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவை வழங்குவதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம். “ப்ரீ கார் கேர் கிளினிக்” சேவைகள் திட்டம், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்குவதேயாகும். அதே நேரத்தில் அவர்களுக்கு ஒனர்ஷிப் அனுபவத்தை கொடுப்போம்.

இந்தாண்டுகான “ப்ரீ கார் கேர் கிளினிக்”-கின் தீம், வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையை அளிப்பதுடன், பிராண்ட் ரேங்கிங்கை நம்பர் ஒன்னாக மாற்ற உள்ளோம். கடந்த ஆண்டு நடத்தப்பட்ட “ப்ரீ கார் கேர் கிளினிக்” மார்ச் 2018-ல் தொடங்கப்பட்டு 10 நாட்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் 2.5 லட்சம் வாடிக்கையாளர்கள் பயன் பெற்றனர்.

இந்திய அளவில் “ப்ரீ கார் கேர் கிளினிக்” நடத்துவதன் நோக்கம், அதன் முக்கியத்துவத்தை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்தி, வாகனங்களுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் சர்விஸ் சென்டர்களில் ஹூண்டாய் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பார்ட்ஸ்களை மாற்றி கொடுப்பதேயாகும்.

27-வது தேசியளவிலான “ப்ரீ கார் கேர் கிளினிக்” நாட்டில் முதல் முறையாக குர்கர்னில் உள்ள ஆம்பியன் மாலில் உள்ள பிரிலியன்ட் கிட்ஸ் மோட்டார் ஷோ 2018-ல் நடத்தப்பட்டது. இந்த கண்காட்சிக்காக நாட்டில் பல்வேறு பகுதியில் உள்ள குழந்தைகளிடம் இருந்து 5000-க்கு மேற்பட்ட என்ட்ரிகள் வந்துள்ளன. இந்த 5000 என்ட்ரிகளில், 8 டாப் டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டு, அதே போன்ற மாடல் கார்கள் பெரியளவில் தயாரி செய்யப்பட உள்ளது. இதுமட்டுமின்றி, 8 குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் தயாரிப்பு தொழிற்சாலையை பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்

Exit mobile version