அதிரவிடும் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி முன்பதிவு

ஹூண்டாய் கோனா மின்சார எஸ்யூவி

ஹூண்டாயின் முதல் மின்சார எஸ்யூவி கார் மாடலாக வெளியிடப்பட்டுள்ள கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விற்பனை தொடங்கப்பட்ட 10 நாட்களில் 120 உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவுகளை பெற்று சாதனை படைத்துள்ளது.

10,000க்கு மேற்பட்ட நபர்களால் டெஸ்ட் டிரைவ் விண்ணப்பம் கோரப்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் 11 முன்னணி நகரங்களில் 15 டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட உள்ளது. மிக குறைவான உள்கட்டமைப்பு பெற்ற மின்சார கார்களுக்கான சார்ஜிங் நிலையங்களை பெற்றுள்ள நிலையில் அபரிதமான வரவேற்பினை பெற்றுள்ளது இந்தியர்களின் எலெக்ட்ரிக் கார் மீதான ஆர்வத்தை குறிக்கின்றது.

புக்கிங் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் தேசிய விற்பனைத் தலைவர் விகாஸ் ஜெயின் கூறுகையில், “மின்சார கார்களின் மீதான ஈர்ப்பு வாடிக்கையாளர்களிடம் சிறப்பாகவே உள்ளது. குறிப்பாக இந்த கார் குறித்தான ஆன்லைன் மற்றும் டீலர்களிடம் நேரடியாக விசாரிக்கப்படுகின்றது. மேலும், டெஸ்ட் டிரைவ் செய்வதற்கான கோரிக்கை மிகப்பெரிய அளவில் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கோனா எலெக்ட்ரிக் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் (permanent magnet synchronous motor) முறையில் உள்ளதாகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 136 ஹெச்பி குதிரை சக்தி மற்றும் 395 என்எம் டார்க் வழங்குகின்ற இந்த காரில் 39.2kWh லித்தியம் இயான் பேட்டரி கொடுக்கப்பட்டு, சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 452 கிமீ தொலைவு பயணிக்கும் திறுனுடன் விளங்குவதாக ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.7 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும். முழுமையான பேட்டரி சார்ஜிங் செய்வதற்கு 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் அதிகபட்சமாக 57 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். மேலும், சாதாரன ஏசி சார்ஜர் வாயிலாக 6 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும்.

இந்த காரில் ஈக்கோ, கம்ஃபார்ட் , மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமாக டிரைவிங் மோடுகள் உள்ளன.

இந்தியாவில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி விலை ரூபாய் 25.30 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

 

Exit mobile version