ஜூலை மாதத்தில் ஹூண்டாய் விற்பனை 7.7%-ஆக உயர்வு

இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பாளராக விளங்கி வரும் ஹூண்டாய் மோட்டார் இந்திய லிமிடெட் இந்தாண்டின் ஜூலை மாதத்தில் மொத்தமாக 59,590 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. உள்நாட்டை பொறுத்தவரை ஹூண்’டாய் நிறுவனம் ஜூலை மாதத்தில் 43,481 யூனிட்களை விற்பனை செய்து 1.1 சதவிகித விற்பனை உயர்வை காட்டியுள்ளது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் 43,007 யூனிட்களை விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்றுமதியை பொறுத்தவரை 16,109 வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து 31% உயர்வை கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் 12,308 வாகங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஹூண்’டாய் இந்தியாவின் மொத்த விற்பனை 59,590 யூனிட்களுடன் 7.7 % உயர்வை கொண்டுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே கால கட்டத்தில் 55,315 ஆக இருந்தது.

ஹூண்டாய் இந்தியா நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் சிறிய கார் மற்றும் AH2 என்ற கோடுநேம் உள்பட இரண்டு புதிய மாடல்களை வரும் அக்டோபர் மாதத்தின் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் ஒரு காருக்கு சான்ட்ரோ என்ற பெயரிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து நிறுவனம் இன்னும் உறுதியாக சொல்லவில்லை. இதில் AH2 ஆட்டோமேட்டடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்ட முதல் கார்-ஆக இருக்கும். இந்த கார்கள் 1.0 லிட்டர் பெடரல் மற்றும் ஐந்து-ஸ்பீட் மேனுவல் கியர்பாஸ் கொண்டதாக இருக்கும். இந்த புதிய கார்கள், மாருதி சுசூகி ஆல்டோ கே 10 மற்றும் ரெனால்ட் குவிட் உள்ளிட்ட முன்னணி கார்களுக்கு போட்டியாக இருக்கும்

Exit mobile version