Automobile Tamilan

உலகின் முதல் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் டிரான்ஸ்மிஷன் விவரம்

Hyundai unveils active shift control

ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் ஹைபிரிட் கார்களுக்கு என முதன்முறையாக ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் (Active Shift Control transmission) டிரான்ஸ்மிஷன் என்ற மிகவும் சிறப்பான முறையில் கியர் ஷிஃபட்டை கண்காணித்து செயல்படும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.

உலகின் முதல் ஏக்டிவ் ஷிப்ட் கன்ட்ரோல் (ஏஎஸ்சி) டிரான்ஸ்மிஷனை உருவாக்கியுள்ள இந்நிறுவனம், இதனை தனது ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் ஹைபிரிட் மாடல்களில் பயன்படுத்த உள்ளது. முதன்முறையாக இந்த நுட்பத்தை ஹூண்டாய் சோனாட்டா ஹைபிரிட் காரில் இடம்பெற உள்ளது.

ஹூண்டாய் ஏக்டிவ் ஷிஃப்ட் கன்ட்ரோல் என்றால் என்ன ?

ஹூண்டாய் உருவாக்கியுள்ள  இந்த ஏக்டிவ் ஷிப்ட் கண்ட்ரோல் எனப்படுவது புதிய கண்ட்ரோல் லாஜிக் மென்பொருள்  Hybrid Control Unit (HCU) மூலம் கியர் ஷிஃபட்டை ஒரு நொடியில் 500 முறை கண்காணிப்பதன் மூலம்  செயல்திறனை மேம்படுத்துகிறது, இதன் மூலம் டிரான்ஸ்மிஷன் மாற்றத்தை வேகமான முறையில் ஷிப்ட் செய்கிறது. கியர் ஷிப்ட் நேரம் 30 சதவீதம் வரை குறைக்கப்படுகின்றது. விரைவான முறையில் கியர் மாற்றினாலும் மென்மையாக கையாளுவதனை உறுதி செய்கின்றது. இந்த தொழில்நுட்பம் கார்களிலும் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துகிறது. இந்த நுட்பம் விரைவில் உற்பத்திக்கு தயாராக உள்ளது.

கியர் ஷிப்ட் நேரத்தை 30 சதவீதம் குறைப்பதன் பின்னணி ?

பொதுவாக ஹைபிரிட் வாகனங்களில் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துவதற்காக டார்க் கன்வெர்ட்டர்கள் இடம் பெறுவது இல்லை, எரிபொருள் சிக்கனத்தைன் மேம்படுத்த மென்மையான கியர் மாற்றங்களை உறுதிப்படுத்த இதுபோன்ற அமைப்புக்கு நீண்டகால கியர் ஷிஃப்ட் தேவைப்படுகின்றது. புதிய மென்பொருள் HCU மூலம் இந்த இழப்புகளை குறைக்க ASC உதவுகிறது.

கியர் ஷிஃப்ட் நேரம் 500 மில்லி விநாடிகளில் இருந்து 350 மில்லி விநாடிகளாக குறைக்கப்படுவதனால் 30 சதவீதம் கியர் மாற்றும் நேரம் குறைக்கப்படுகிறது. இது ஹைபிரிட் வாகனத்தின் செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கியர் ஷிப்டின் போது அதிகப்படியான உராய்வைக் குறைப்பதன் மூலம் டிரான்ஸ்மிஷனின் ஆயுளையும் மேம்படுத்துகிறது.

Hyundai active shift control

உலகின் முதல் ஏஎஸ்சி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒரு குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்பாகும், இது ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்களுக்கு துல்லியமான மோட்டார் கட்டுப்பாட்டை வழங்குகின்றது” என்று ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் துணைத் தலைவரும் பவர் டிரெய்ன் கன்ட்ரோல் பிரிவு குழுவின் தலைவருமான கியோங்ஜூன் சாங் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இந்த நுட்பம் எரிபொருளை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தினை வழங்கும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version