33,000 முன்பதிவுகளை பெற்று அதிரவிடும் ஹூண்டாய் வெனியூ

0

Hyundai venue SUV

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளரின், ஹூண்டாய் வெனியூ எஸ்யூவி கார் விற்பனைக்கு வந்த ஒரு மாதத்துக்குள் 33,000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது. எனவே, காத்திருப்பு காலம் 6 முதல் 8 வாரங்களாக உயர்ந்துள்ளது.

Google News

4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் மிகவும் ஸ்டைலிஷான காம்பாக்ட் ரக எஸ்யூவி மாடலாக வெளிவந்துள்ள வெனியூ காரில் பல்வேறு ஸ்மார்ட் டெக் வசதிகள் வழங்கப்பட்டுள்ளதால் இளைய தலைமுறையினரை பெரிதும் கவர்ந்துள்ளது.

ஹூண்டாய் வெனியூ சிறப்பு வசதிகள்

120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் மூன்று சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜினில் 7 வேக டியூவல் கிளட்ச் ஆட்டோ மற்றும் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.

அடுத்த பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும்.

அடுத்த டீசல் என்ஜின் ஆப்ஷனில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் மாடல் 90 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 220 என்எம் முறுக்குவிசை வென்யூ கார் வெளிப்படுத்தும்.

ப்ளூலிங்க் தொழில்நுட்பம்

மொத்தம் ஏழு வகையான பிரிவுகளை பெற்ற கனெக்ட்டிவிட்டி நுட்பங்களை பெற்றுள்ள இந்த வெனியூ காரில் குறிப்பாக காரினை பாதுகாக்கும் அம்சம், அவசரகால பாதுகாப்பு உரிமையாளர்களுக்கு காரின் நிலையை உடனுக்குடன் அறியும் வசதி, வாகனத்தின் பாரமரிப்பு சார்ந்த மேலான்மை வசதி போன்றவை இடம்பெறுள்ளன.

ரூ. 6.50 லட்சத்தில் தொடங்கும் வெனியூ பெட்ரோல் கார் அதிகபட்சமாக ரூ. 11.10 லட்சம் வரையிலும் , ரூ.7.75 லட்சத்தில் தொடங்கும் டீசல் ரக மாடல் அதிகபட்சமாக ரூ. 10.84 லட்சம் வரையில் அமைந்திருக்கின்றது.