2020 ஆம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த கார் ஹூண்டாய் வென்யூ – ICOTY 2020

hyundai venue icoty 2020

2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த கார் விருதினை ஹூண்டாய் வென்யூ வென்றுள்ளது. பிரீமியம் பிரிவில் சிறந்த காராக பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

நடுவர் மன்றத்தில் ஆட்டோ டுடே இதழில் யோகேந்திர பிரதாப் மற்றும் ராகுல் கோஷ், ஆட்டோஎக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த துருவ் பெல் மற்றும் இஷான் ராகவா, கார் இந்தியாவைச் சேர்ந்த ஆஸ்பி பதேனா மற்றும் சர்மத் காத்ரி, ஈவோ-வைச் சேர்ந்த சிரிஷ் சந்திரன் மற்றும் அனிருத்த ரங்நேகர், மோட்டாரிங் வோர்ல்டிலிருந்து கார்த்திக் வேர் மற்றும் பாப்லோ சாட்டர்ஜி,  ஓவர் டிரைவைச் சேர்ந்த பெர்ட்ராண்ட் மற்றும் ரோஹித் பரட்கர், இந்து பத்திரிக்கையின் சேர்ந்த முரலிதர். எஸ், பயணீர் குஷன் மித்ரா, கார்வேலைச் சேர்ந்த விக்ராந்த் சிங் போன்றோர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2020 ஆம் ஆண்டின் சிறந்த கார் தேர்வுக்கான சுற்றில் இடம்பெற்றுள்ள மாடல்களின் பட்டியல் பின்வருமாறு;-  ஹோண்டா சிவிக், ஹூண்டாய் கிராண்ட் ஐ 10 நியோஸ், ஹூண்டாய் வென்யூ, கியா செல்டோஸ், மாருதி சுசுகி எஸ்-பிரஸ்ஸோ, மாருதி வேகன் ஆர், மஹிந்திரா எக்ஸ்யூவி300, எம்ஜி ஹெக்டர், நிசான் கிக்ஸ், ரெனால்ட் ட்ரைபர் மற்றும் டாடா ஹாரியர் ஆகியவை அடங்கும்.

2020 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் சிறந்த பிரீமியம் கார் தேர்வுக்கான சுற்றில் இடம்பெற்றுள்ள மாடல்களின் பட்டியல் பின்வருமாறு;- ஆடி ஏ6, மெர்சிடிஸ் பென்ஸ் வி கிளாஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்5, பிஎம்டபிள்யூ 3 சீரிஸ், பிஎம்டபிள்யூ எக்ஸ்4, எக்ஸ்7, இசட்எக்ஸ்4, ஜீப் ரேங்கலர், மெர்சிடிஸ் சிஎல்எஸ், மற்றும் போர்ஷே 911 கரேரா எஸ் போன்றவை ஆகும்.

icoty 2020 bmw 3 series

கடந்த 2019 ஆம் ஆண்டு சிறந்த கார் மாடலாக மாருதி சுசுகி ஸ்விஃப்ட் தேர்வு செய்யப்பட்டது. 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த பைக் மாடலாக ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 தேர்வு செய்யப்பட்டுள்ளது.