Site icon Automobile Tamilan

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய எஸ்யூவி சோதனை செய்யப்பட்டது

ஹூண்டாய் புதிய எஸ்யூவி கார்களை வெளியிட முயற்சி செய்து வருகிறது. 2016 ஆட்டோ எக்ஸ்போவில் கார்லினோ கான்ச்பெட் காட்சிக்கு வைக்கப்பட்டது. இது ஹுண்டாய் நிறுவனத்தின் நோக்கத்தை உறுதியது. இந்த புதிய கார் குளோபல் மாடலாக இருப்பதோடு, வலது மற்றும் இடது கை என இரண்டு கைகளாலும் ஓட்டும் வகையில் உருவாக்கப்பட்டு மார்க்கெட்டில் விற்பனைக்கு வர உள்ளது.

இந்த புதிய கார் கொரியா மற்றும் வட அமெரிக்கா உள்பட உலகின் பல நாடுகளில் உள்ள சாலைகளில் சோதனை செய்யப்பட்டதாக தெரிகிறது. ஸ்பை பிச்சர்களின் அடிப்படையில் இந்த புதிய எஸ்யூவிகள் அனேகமாக ஹூண்டாய் நிறுவனத்தின் நவீன டிசைன்களுடன், சிறிய வெர்சன் காரான ஹூண்டாய் கிரெட்டா மாடல் போன்றே இருக்கும் என்று தெரிகிறது.

இந்த காரை வரும் 2019ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டில் இந்தியாவிற்கு கொண்டு வர ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுமட்டுமின்றி மற்றொரு மைக்ரோ எஸ்யூவி கார் ஒன்றையும் இந்த நிறுவனம் தயாரித்து வருகிறது. ஆனாலும் இந்த சிறய கார்களின் மார்க்கெட் லான்ச், மூன்று ஆல்லது நான்கு ஆண்டுகளுக்கு பின்னரே இருக்கும் என்று தெரிய வந்துள்ளது.

Exit mobile version