ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் தயாரிப்பு முடிவுக்கு வந்தது

Iconic Volkswagen Beetle Ends Production

81 ஆண்டுகளாக சந்தையிலிருந்து ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் உற்பத்தி ஜூலை 10, 2019 தேதி அன்று நிறைவடைந்தது. ஹிட்லர் அறிவுரையின் படி போர்ஷே கார் நிறுவனத்தின் தலைவர் பேர்ஷேவால் வடிவமைக்கப்பட்ட வண்டு கார் பீட்டில் இறுதி மாடலானது மெக்ஸிகோவில் உள்ள இந்நிறுவனத்தின் ஆலையில் தயாரிக்கப்பட்டது.

இறுதியாக தயாரிக்கப்பட்ட பீட்டில் காரை விற்பனைக்கு கொண்டு செல்லாமல் மெக்சிகோவில் உள்ள பியூப்லா ஃபோக்ஸ்வேகன் அருங்காட்சியகத்தில் வைக்க இந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

1938 ஆம் ஆண்டு உற்பத்திக்கு வந்த பீட்டில் 2003 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து முதல் தலைமுறை மாடலாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பிறகு 1998 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட புதிய பீட்டில் 2012 வரையும், 2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மூன்றாவது தலைமுறை பீட்டில் கார் இந்தியாவிலும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இறுதி பதிப்பு மாடல் மெக்சிக்கோவில் உள்ள ஆலையில் தயாரிக்கப்பட்டு வந்தது. முதல் தலைமுறை பீட்டில் நிறுத்தப்பட்ட நேரத்தில் 21.5 மில்லியன் யூனிட் விற்பனையை தாண்டியது, அதே நேரத்தில் இரண்டாம் தலைமுறை மாடலின் 1.2 மில்லியன் யூனிட்டுகள் 1998 மற்றும் 2010 க்கு இடையில் விற்கப்பட்டன. வோக்ஸ்வாகன் பீட்டல் மூன்றாவது தலைமுறையில் 5,00,000 யூனிட்டுகளை உற்பத்தி செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

IC என்ஜின் கொண்ட பீட்டில் முடிவிற்கு வந்துள்ள நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் எலெக்ட்ரிக் பவர்ட்ரெயின் பெற்ற மாடலாக ஃபோக்ஸ்வேகன் பீட்டில் விற்பனைக்கு வரக்கூடும் எதிர்பார்க்கப்படுகின்றது.