Automobile Tamil

2020 ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி சோதனை ஓட்ட விபரம் வெளியானது

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில் எதிர்பார்க்கப்படுகின்ற மேம்பட்ட ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி காரின் சாலை சோதனை ஓட்டத்தின் புதிய படங்களை வெளியானதை தொடர்ந்து தோற்ற அமைப்பினை பொறுத்தவரை, சமீபத்தில் சீன சந்தையில் வெளியிடப்பட்ட ஐஎக்ஸ் 25 மாடலின் தோற்ற சாயலை நேரடியாகவே பெற்றுள்ளதை உறுதி செய்கின்றது.

 சீன சந்தையில் கிடைக்கின்ற மாடலுக்கு இணையான தோற்ற அமைப்பினை பெற்றிருக்க உள்ள இந்த காரில் முகப்பு கிரில் ix25 போல தேன்கூடு கிரில் அமைப்பினை பெறாமல் மாற்றான ஸ்லாட் கிரிலை வெளிப்படுத்தும் கேஸ்கேடிங் கிரிலை கொண்டுள்ளது. அடுத்தப்படியாக, புதிய மாடல் இரு பிரிவுகளை பெற்ற முன் விளக்கு, புதிய வடிவத்தைப் பெற்ற அலாய் வீல், இரு பாக்ஸ் வடிவ டிசைனை கொண்டு மிக அகலமான சன்ரூஃப் பெற்றுள்ள இந்த எஸ்யூவி காரின் பின்புற டெயில் விளக்குகளுடன் வரவுள்ளது.

விற்பனையில் உள்ள மாடலை விட 30 மிமீ நீளம் அதிகரிக்கப்பட்டு தற்பொழு 4,300 மிமீ நீளத்துடன் அகலம் 10 மிமீ அதிகரிக்கபட்டு 1,790 மிமீ பெற்றதாக இந்த எஸ்யூவி விளங்குகின்றது.

இன்டிரியர் அமைப்பினை பொறுத்தவரை, ப்ளூலிங்க் டெக்னாலாஜி பெற உள்ள கிரெட்டா காரில் சீன சந்தையில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்படலாம். இதே போன்ற அமைப்பினை இந்தியாவிலும் இந்நிறுவனம் வழங்க வாய்ப்புகள் உள்ளது. இன்டிரியரின் டேஸ்போர்டு மற்றும் ஸ்டீயரிங் வீலில் சிறிய மாறங்ள் பெற்றிருக்கும். மேலும் இந்தியாவில் முதற்கட்டமாக 5 இருக்கை கொண்ட மாடலும் பிறகு 7 இருக்கை பெற்ற கிரெட்டா காரும் வெளியாகலாம்.

கியா செல்டோஸ் காரில் இடம்பெற்றுள்ள பிஎஸ் 6 என்ஜின் ஆப்ஷன்களை அப்படியே க்ரெட்டா காரும் பெற உள்ளது. 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.6 லிட்டர் டீசலுக்கு மாற்றாக புதிய 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பெற்றிருக்கும். அடுத்தப்படியாக கூடுதலாக  1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினும் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்டோ எக்ஸ்போ 2020 கண்காட்சியில் முதன்முறையாக இந்திய சந்தைக்கு புதிய ஹூண்டாய் கிரெட்டா வெளியாகலாம். இந்த காரின் விலை தற்பொழுது விற்பனையில் உள்ள மாடலை விட கூடுதலாக அமைந்திருக்கும்.  கிரெட்டா காருக்கு போட்டியாக புதிய எஸ்யூவியும் கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி 500, ரெனால்ட் கேப்டூர் மற்றும் நிசான் கிக்ஸ் போன்றவற்றிலிருந்து இந்திய சந்தையில் கடுமையான போட்டியை எதிர்கொள்ளும்.

image source – autocarindia.com

Exit mobile version