ஜீப் காம்பஸ் எஸ்யூவி நாளை அறிமுகம்

இந்திய சந்தைக்கான ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடல் நாளை அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. காம்பஸ் விற்பனைக்கு ஆகஸ்ட மாத மத்தியில் வெளியிடப்படும் வாய்ப்புகள் உள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவி

  • ஏப்ரல் 12ந் தேதி இந்திய சந்தைக்கான ஜீப் காம்பஸ் வெளியிடப்பட உள்ளது.
  • இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட உள்ள முதல் ஜீப் பிராண்டு மாடலாகும்
  • ரூ.19 லட்சத்தில் காம்பாஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை தொடங்கலாம்.

இந்தியாவின் ஃபியட் நிறுவனத்தின் இராஞ்சகவுன் ஆலையில் தயாரிக்கப்பட உள்ள ஜீப் காம்பாஸ் எஸ்யூவி மாடலின் அதிகார்வப்பூர்வ தகவல்கள் நாளை வெளியிடப்பட உள்ள நிலையில் எஸ்யூவி மாடலின் டீசர் வீடியோ ஒன்றை ஜீப் வெளியிட்டுள்ளது.

இந்திய சந்தைக்கான எஞ்சின் விபரங்கள் உறுதி செய்யப்படாத நிலையில் எதிர்பார்க்கப்படுகின்ற எஞ்சின் ஆப்ஷன் 170 ஹெச்பி ஆற்றலுடன் 350 என்எம் டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் மற்றும் 140 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் மல்டிஏர் பெட்ரோல் என்ஜினும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4×4 டிரைவ் , 4×2 டிரைவ் போன்ற ஆப்ஷனுடன் ஆஃப்ரோடு அம்சங்களை கொண்டதாக வரவுள்ள காம்பஸ் எஸ்யுவி மாடலில் 7 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்இடம்பெற்றிருக்ககூடும்.

கம்பீரமான தோற்ற பொலிவுடன் ஸ்டைலிசான அம்சங்களை பெற்றுள்ள இந்த மாடலில் ஸெனான் முகப்பு விளக்குகளுடன் இணைந்த பகல் நேரத்தில் எரியும் எல்இடி விளக்குகள் போன்றவற்றுடன் இன்டிரியரில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கீலெஸ் என்ட்ரி, எஞ்சின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பொத்தான், உயர்தர லெதர் இருக்கைகள் மற்றும் அப்ஹோல்ஸ்ட்ரியை பெற்றதாக இருக்கும்.

இந்தியாவிலே தயாரிக்கப்படுகின்ற முதல் ஜீப் எஸ்யூவி மாடலாக வரவுள்ள காம்பஸ் எஸ்யூவி விலை ரூபாய் 19 லட்சத்தில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

[foogallery id=”17019″]

Recommended For You