ஆடம்பர ஹோட்டல் போன்ற இன்டிரியரில் இன்பினிட்டி QX50

0

மணல் கடற்கரைகள் மற்றும் படிக நீல கடல் போன்ற நிறங்களில் ஆடம்பர ஹோட்டல் போன்ற இன்டிரியரில் இன்பினிட்டி QX50 ஆடம்பரமான ரிசார்ட் ஹோட்டலில் உள்ளதை போன்று உணர்வை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நிசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுமட்டுமின்றி, கவரும் வகையிலான கலர்கள், மரவேலைப்பாடுகள் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் சாக்லேட் பிரவுன் வண்ணத்திலும், தரைப்பகுதி மணல் கடற்கரைகள் மற்றும் படிக நீல கடல் போன்ற நிறங்களில் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

Google News

இது அதிக வசதி கொண்டதோடு, வாகனத்தில் பயணம் செய்பவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் சூழ்நிலையை உருவாக்கும்.

இதுக்குறித்து பேசிய இன்பினிட்டி நிறுவன உயர்அதிகாரி கரீம் ஹபீப்தெரிவிக்கையில், இந்த கார்களில் இன்டிரியரில் டிசைனுக்காக சிறந்த டிசைனர்கள் மற்றும் இஞ்சினியர்களிடம் இருந்து சிறந்த பொருட்களை கொண்டு, அழகிய வண்ணங்களில் உருவாகப்பட்டுள்ளது என்றார்.

இந்த காரின் ஒப்பற்ற இன்டிரியர் ஸ்பேஸ், கவனமாகக் கையாளப்பட்ட வண்ணங்கள், உயர்தர பொருட்கள் மற்றும் மேம்பட்ட கலையுணர்வு ஆகியவைகளால் காரின் கேபின் பெரியளவு வரவேற்பை பெறும் என்பதோடு, ஆடம்பரமாகவும், வசதிக்காகவும் பயணிக்கும் வகையில் இருக்கும்.

இதுமட்டுமன்றி QX50-யின் அழகிய வடிமைப்பு வாகன டிரைவர்கள் மற்றும் பயணிகளின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.