இந்தியாவில் ஜாகுவார் XE, XF கார்களில் இஞ்ஜினியம் பெட்ரோல் மாடல் அறிமுகம்

ஜாகுவார் நிறுவனம்,இந்தியாவில் புதிய 2.0 லிட்டர் இஞ்ஜினியம் பெட்ரோல் எஞ்சின் பெற்ற மாடல்களை ஜாகுவார் XE மற்றும் ஜாகுவார்  XF  கார்களில் விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இரு மாடல்களும் இரு விதமான பவர் நிலைகளில் இஞ்சினியம் பெட்ரோல் எஞ்சினை பெற்றுள்ளது.

ஜாகுவார் XE, XF கார்களில் இஞ்ஜினியம்

ஜாகுவார் நிறுவனம் , சமீபத்தில் அறிமுகம் செய்த இலகு எடை பெற்ற அலுமினியத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டிருந்த இஞ்சினியம் எஞ்சின் சிறப்பான வகையில் வெப்ப ஆற்றலை பராமரிக்க , வாகனத்தின் நிலைப்பு தன்மை உட்பட ஆற்றலை மிகச் சரியாக கையாளுவதற்கு ஏற்ற வகையில் Continuously Variable Valve Lift  பெற்ற இந்த எஞ்சின்கள் முந்தைய ஜேஎல்ஆர் மாடல் எஞ்சினை விட 25 சதவீத கூடுதல் ஆற்றல் வழங்குவதுடன், 15 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் கொண்டதாக விளங்குகின்றது.

ஜாகுவார் XE காரில் ப்யூர் மற்றும் பிரெஸ்டீஜ் ஆகிய இரு வேரியன்டில் வந்துள்ள பெட்ரோல் எஞ்சின் மாடல் முறையே 197 ஹெச்பி மற்றும் 247 ஹெச்பி என இரு பவர் நிலையில் கிடைக்க உள்ளது. ஜாகுவார் XF மாடலில் ப்ரெஸ்டீஜ் மற்றும் போர்ட்ஃபோலியா ஆகிய இரு வேரியன்டில் இந்த எஞ்சின் கிடைக்க தொடங்கியுள்ளது. இரு கார்களில் 8 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் Jaguar XE பெட்ரோல் மாடல் ஆரம்ப விலை ரூ. 35.99 லட்சம், மற்றும் Jaguar XF பெட்ரோல் மாடல் ஆரம்ப விலை ரூ. 49.80 லட்சம் ஆகும்.

Jaguar-XE-XF-gets-Ingenium-Petrol

2018 Jaguar XE – Prices

XE Petrol Pure – ரூ.35.99 லட்சம்
XE Petrol Prestige – ரூ. 39.95 லட்சம்

XE Petrol Portfolio – ரூ. 44.46 லட்சம்
XE Diesel Pure – ரூ. 36.75 லட்சம்
XE Diesel Prestige – ரூ. 40.68 லட்சம்
XE Deisel Portfolio – ரூ. 44.86 லட்சம்

2018 Jaguar XF – Prices

XF Petrol Prestige – ரூ. 49.80 லட்சம்
XF Petrol Portfolio – ரூ. 58.93 லட்சம்
XF Diesel Pure – ரூ. 46.60 லட்சம்
XF Diesel Prestige – ரூ. 51.71 லட்சம்
XF Diesel Portfolio – ரூ. 59.49 லட்சம்

Recommended For You