ரூ.16.99 லட்சத்தில் ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

0

jeep compass facelift price

இந்திய சந்தையில் வெளியிடப்பட்டுள்ள புதிய ஜீப் காம்பஸ் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.16.99 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.28.29 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

Google News

காம்பஸ் எஸ்யூவி மாடலில் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டதாக இயங்குகிறது. 170 PS பவர் வழங்க 3750 RPM மற்றும் 350 Nm டார்க் வங்க 1500-2500RPM-ல் உருவாக்குகிறது. இந்த இன்ஜின் ஆல் வீல் டிரைவ் பெற்ற வேரியண்எடில் 9-வேக டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் செயல்படுகிறது. மேலும் கூடுதலாக 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

பெட்ரோல் மாடலில் 163 hp பவருடன், 250 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதிலும் 6 வேக கியர்பாக்ஸ் மற்றும் 7 வேக டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் பெற்றுள்ளது.

2021 Jeep Compass Facelift Dashboard

ஜீப் காம்பஸ் விலை பட்டியல்

2021 Jeep Compass Variants Prices (ex-showroom)
Sport Trims
Compass Sport 1.4 Petrol MT ₹ 16.99 லட்சம்
Compass Sport 2.0 Diesel MT ₹ 18.69 லட்சம்
Compass Sport 1.4 Petrol DDCT ₹ 19.49 லட்சம்
Longitude Trims
Compass Longitude (O) 2.0 Diesel MT ₹ 20.49 லட்சம்
Compass Longitude (O) 1.4 Petrol DDCT ₹ 21.29 லட்சம்
Limited (O) Trims
Compass Limited (O) 2.0 Diesel MT ₹ 22.49 லட்சம்
Compass Limited (O) 1.4 Petrol DDCT ₹ 23.29 லட்சம்
Compass Limited (O) 2.0 Diesel 4×4 AT ₹ 26.29 லட்சம்
Model ‘S’ Trims
Compass Model ‘S’ 2.0 Diesel MT ₹ 24.49 லட்சம்
Compass Model ‘S’ 1.4 Petrol DDCT ₹ 25.29 லட்சம்
Compass Model ‘S’ 2.0 Diesel 4×4 AT ₹ 28.29 லட்சம்
80th Anniversary Limited Edition Trims
Compass Limited 80th Anniv 2.0 Diesel MT ₹ 22.96 லட்சம்
Compass Limited 80th Anniv 1.4 Petrol DDCT ₹ 23.76 லட்சம்
Compass Limited 80th Anniv 2.0 Diesel 4×4 AT ₹ 26.76 லட்சம்

 

முற்றிலும் புதிய டேஸ்போர்டினை பெற்று டிஜிட்டல் கிளஸ்ட்டர், மிதக்கும் வகையிலான 10.1 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் FCA UConnect 5 கனெக்ட்டிவிட்டி ஆதரவுடன் அமேசான் அலெக்சா ஆதரவு, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆதரவு இணைக்கப்பட்டு, ஏசி, ஹெச்விஏசி கன்ட்ரோல்கள் மாற்றப்பட்டுள்ளது.

டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி, டிராக்‌ஷன் கன்ட்ரோல், இஎஸ்சி, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், மற்றும் ISOFIX குழந்தைகள் இருக்கை வழங்கப்பட்டுள்ளது.

jeep compass facelift rear

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் டூஸான், ஸ்கோடா கரோக் ஆகியவற்றை நேரடியாக எதிர்கொள்ளுகின்றது.