Automobile Tamilan

ஜீப் நிறுவனத்தின் புதிய காம்பஸ் ஸ்போர்ட்ஸ் பிளஸ் எஸ்யூவி கார்

Jeep Compass

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஜீப் காம்பஸ் எஸ்யூவி வரிசையில் புதிதாக ஸ்போர்ட்ஸ் பிளஸ் என்ற வேரியண்ட் ரூபாய் 15.99 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியன்ட் ரூ.16.99 லட்சம் என இரண்டிலும் விற்பனைக்கு வந்துள்ளது. என்ஜின் மற்றும் தோற்ற அமைப்பில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை.

காம்பஸ் எஸ்யூவி காரில் 173 hp ஆற்றலுடன் 350 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்து பெட்ரோல் மாடலில் 163 hp பவருடன்,  250 Nm டார்க்கினை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் ட்ர்போ பெட்ரோல் என்ஜின் இடம்பெற்றுள்ளது. இதிலும் 6 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது.

ஸ்போர்ட் பிளஸ் மாடலில் கருப்பு நிற ரூஃப் ரெயில், 16 அங்குல அலாய் வீல், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், டெயில்கேட்டில் ஸ்போர்ட்ஸ் பிளஸ் பேட்ஜ், பின்புற விண்ட்ஸ்கீரினில் பாடி கிளாடிங் உள்ளிட்ட அம்சங்களை பெற்றுள்ளது.

இண்டிரியரில் இந்த காரில் 5 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், டூயல் ஏர்பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், என பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை பெற்றதாக உள்ளது.

இந்திய சந்தையில் விற்பனையில் உள்ள ஹூண்டாய் டூஸான், ஹோண்டா சிஆர்-வி , எக்ஸ்யூவி500 போன்ற மாடல்களுக்கு நேரடியான போட்டியாளராக விளங்கும் இந்த எஸ்யூவி மாடலுக்கு போட்டியாக புதிதாக வரவிருக்கும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி மாடலும் சவாலினை ஏற்படுத்தும்.

Exit mobile version