ரூ.63.94 லட்சத்தில் ஜீப் ரேங்கலர் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

0

Jeep Wrangler

இந்தியாவில் 5 டோர்களை பெற்ற புதிய தலைமுறை ஜீப் ரேங்கலர் எஸ்யூவி பல்வேறு வதிகளுடன் ரூபாய் 63.94 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. முழுவதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக ஜீப் ரேங்லர் எஸ்யூவி அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.

Google News

புதிதாக வந்துள்ள ரேங்க்லர் எஸ்யூவி மாடலில் புதுப்பிக்கப்பட்ட டேஸ்போர்டில் வழங்கப்பட்டுள்ள Uconnect 4C NAV 8.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் வந்துள்ளது. ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கீலெஸ் என்ட்ரி, ஸ்டார்ட் ஸ்டாப் பொத்தான் உட்பட பிரீமியம் லெதர் இருக்கைகள் என பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது.

ஜீப்பின் பாரம்பரிய ஏழு ஸ்லாட் கொண்ட முன் கிரில், எல்இடி ரன்னிங் விளக்குடன் கூடிய ஹெட்லேம்ப், நேர்த்தியான பானெட் உட்பட அகலமான பெரிய டெயில் விளக்குகள் மற்றும் பின்புறத்தை காண்பதற்கு ஏற்ப ஸ்பேர் வீல் கீழ் பகுதியில் பொருத்தப்பட்டுள்ளது.

ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை பெற்றுள்ள இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர், டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு அதிகபட்சமாக 270 ஹெச்பி மற்றும் 400 என்எம் டார்க் வழங்குகின்றது. இதில் 8 வேக டார்க் கன்வெர்டர் தானியங்கி கியர்பாக்ஸ் வழியாக நான்கு சக்கரங்களுக்கும் சக்தியை அனுப்புகிறது.