எர்டிகா, மராஸ்ஸோவை வீழ்த்த கியா நடுத்தர எம்பிவி தயாராகிறது

0

kia sonet

கார்னிவல் காரை வெளியிட்டதை தொடர்ந்து கியா மோட்டார்ஸ் நிறுவனம் பண்டிகை காலத்தில் சோனெட் எஸ்யூவி காரையும், அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடுத்தர அளவு எம்பிவி மாடலை உள்நாட்டில் தயாரித்து விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

Google News

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற நடுத்தர எம்பிவி ரக மாடல்களான எர்டிகா, மராஸ்ஸோ மற்றும் குறைந்த விலை ட்ரைபர் டாப் வேரியண்ட் போன்ற மாடல்களுடன் போட்டியிடும் வகையில் உருவாக்கப்பட உள்ள கியா நிறுவனத்தின் அடுத்த எம்பிவி கார் செல்டோஸ் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்டு பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷனையும் பெற உள்ளது.

2021 ஆம் ஆண்டின் தொடக்க மாதங்களில் வெளியிடப்பட உள்ள கியாவின் நடுத்தர அளவிலான எம்பிவி கார் எர்டிகா மற்றும் மரஸ்ஸோ கார்களை விட கூடுதலான வகையில் பல்வேறு விதமான வசதிகளை கொண்டதாகவும், சோனெட் காரில் இடம்பெற உள்ள என்ஜின் ஆப்ஷனை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போது கியாவின் உலகளாவிய விற்பனையில் 6 சதவிகித பங்களிப்பை இந்தியா கொண்டுள்ளது. மேலும் புதிய தயாரிப்புகள் வெளியாக உள்ளதால், எண்ணிக்கை மிக விரைவில் அதிகரிக்கும் என்று இந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. எனவே, இந்தியா தனது உலகளாவிய விற்பனையில் 10 சதவித பங்களிப்பை இந்தியாவில் எதிர்பார்க்கிறது.

உதவி – ஆட்டோகார் இந்தியா