Automobile Tamilan

வென்யூ, பிரெஸ்ஸா எதிர்கொள்ள.., கியா QYI காம்பாக்ட் எஸ்யூவி சோதனை ஓட்டம்

kia stonic suv

கியா செல்டோஸ் வெற்றியை தொடர்ந்து கார்னிவல் எம்பிவி வெளியாக உள்ள நிலையில், 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை பெற்ற கியா காம்பாக்ட் எஸ்யூவி அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது. பிரபலமான வென்யூ காரின் பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள கியாவின் QYI மாடல் செல்டோஸின் மினியேச்சர் போல காட்சியளிக்கலாம்.

ஹூண்டாய் நிறுவனத்தை தாய் நிறுவனமாக கொண்ட கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலாக வெளிவந்த கிரெட்டா அடிப்படையிலான செல்டோஸ் எஸ்யூவி அமோகமான வரவேற்பினை பெற்று வரும் நிலையில் 50 ஆயிரத்துக்கு அதிகமான முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கின் மூலம் கியா கார்னிவல் எம்பிவி ரக மாடல் வெளியாக உள்ளது. இந்த எம்பிவி ரக ரூ.28 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை தொடர்ந்தே 4 மீட்டருக்கு குறைந்த நீளத்தை பெற்ற எஸ்யூவி மாடல் 2020 ஆம் ஆண்டின் மத்தியில் வெளியாகலாம்.

இந்திய சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ள கியாவின் புதிய QYI என்ற குறீயிட்டு பெயரில் தயாராகி வரும் இந்த காரில் ஹூண்டாய் வென்யூ எஸ்யூவியின் பெரும்பாலான உதிரிபாகங்கள் மற்றும் என்ஜின் உட்பட போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உள்ளது. சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படுகின்ற கியா ஸ்டோனிக் காரின் வடிவமைப்பினை பெற்றிருக்கலாம்.

இன்டிரியர் அமைப்பில் செல்டோஸில் இடம்பெற்றுள்ள UVO கனெக்ட்டிவிட்டி அம்சமான ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே உள்ளிட்ட வசதிகளுடன் இணையம் சார்ந்த பல்வேறு அம்சங்களை பெற்றிருக்கும்.

வென்யூ காரில் உள்ள என்ஜினை பெற உள்ள இந்நிறுவன எஸ்யூவி பிஎஸ் 6 ஆதரவை பெற்ற 120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஆகியவற்றினை பெற உள்ளது. செல்டோஸ் காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பவர் குறைக்கப்பட்டு வெளியிடப்படலாம்.

image source – rushlane

 

இந்திய சந்தையில் கிடைக்கின்ற ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை கியா QYI எஸ்யூவி எதிர்கொள்ள உள்ளது.

Exit mobile version