கியா செல்டோஸ் ஆண்டுவிழா பதிப்பு விற்பனைக்கு வந்தது

0

kia Seltos Anniversary Edition

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் முதல் மாடலான செல்டோஸ் விற்பனைக்கு வெளியிடப்பட்டு ஓராண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில் ஆண்டு விழா பதிப்பு (Seltos Anniversary Edition) பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Google News

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் துவங்கப்பட்ட பிறகு வெளியிடப்பட்ட செல்டோஸ் அமோகமான வரவேற்பினை பெற்றதை தொடர்ந்து கார்னிவல் எம்பிவி மற்றும் 4 மீட்டருக்கு குறைவான சொனெட் எஸ்யூவி என மூன்று மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

விற்பனையில் உள்ள கியா செல்டோசின் HTX வேரியண்ட் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள சிறப்பு ஆனிவர்சரி எடிசன் 6,000 யூனிட்டுகள் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த மாடலை பொறுத்தவரை கருப்பு நிறம் உட்பட டூயல் டோன் நிறங்களில் வெள்ளை உடன் கருப்பு, சில்வர் நிறத்துடன் கருப்பு மற்றும் புதிதாக கிரே நிறத்துடன் இணைந்த கருப்பு என மொத்தமாக நான்கு நிங்களில் கிடைக்க உள்ளது.

முன்புற பம்பர் உட்பட ஸ்கிட் பிளேட் என பல்வேறு இடங்களில் ஆரஞ்சு நிற அசென்ட்ஸ், ‘1st Anniversary Edition’ பேட்ஜ் பின்புறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. காரின் நீளம் மற்ற மாடலை விட 60 மிமீ வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், அதிகபட்சமாக 113 பிஹெச்பி மற்றும் 144 என்எம்  டார்க்கை உருவாக்குகிறது. இந்த என்ஜின் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஐவிடி (IVT – Intelligent continuously variable transmission) ஆட்டோ டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது, இந்த மாடல் மைலேஜ் 16.4 கிமீ (MT) மற்றும் 16.3 கிமீ (AT). மேலும், இந்த என்ஜின் 0-100 கிமீ வேகத்தினை எட்டுவதற்கு 11.8 வினாடிகளில் எடுத்துக் கொள்ளும்.

இறுதியாக, புதிய 1.5-லிட்டர் VGT டீசல் என்ஜினைப் பொறுத்தவரை, 113 பிஹெச்பி மற்றும் 250 என்எம் டார்க்கை உருவாக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், 6 ஸ்பீட் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6-ஸ்பீட் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் மாடல் வெறும் 11.5 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற முடியும். செல்டோஸ் டீசல் கார் மைலேஜ் 17.8 கிமீ (AT) மற்றும் 20.8 கிமீ (MT) ஆகும்.

செல்டோஸ் ஆண்டு விழா பதிப்பு விலை பட்டியல்

Smartstream Petrol 1.5 Anniversary Edition 6MT ரூ.13,75,000
1.5 petrol Anniversary Edition IVT ரூ.14,75,000
Diesel1.5 CRDi VGT Anniversary Edition 6MT ரூ.14,85,000

kia Seltos Anniversary Edition rear

web title : Kia Seltos Anniversary edition launched and prices revealed

For the latest Tamil car news and Truck News, follow automobiletamilan.com on TwitterFacebook, and subscribe to our YouTube channel.