400 கிமீ ரேஞ்சு.., 2020-ல் கியா செல்டோஸ் EV கார் வெளியாகலாம்

0

kia seltos suv car

இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற செல்டோஸ் காரின் அடிப்பையில் மின்சார வாகனத்தை கியா மோட்டார்ஸ் செல்டோஸ் EV என்ற பெயரில் அடுத்த ஆண்டின் இறுதியில் விற்பனைக்கு வெளியிடலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

கியா எஸ்பி 2 என்ற கான்செப்ட் மாடல் கியா செல்டோஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டதை போன்றே தற்போது SP2 EV என்ற குறீயிடு பெயரில் எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருவதாக கூறப்படுகின்றது. எனவே, இந்த மாடலில் விற்பனையில் கிடைத்து வருகின்ற கோனா இ.வி காரில் உள்ள பேட்டரி மற்றும் மோட்டார் ஆப்ஷனை பெறக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

கோனா மின்சார காரில்  உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் (permanent magnet synchronous motor) முறையில் உள்ளதாகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 136 ஹெச்பி குதிரை சக்தி மற்றும் 395 என்எம் டார்க் வழங்குகின்ற இந்த காரில் 39.2kWh லித்தியம் இயான் பேட்டரி கொடுக்கப்பட்டு, சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 452 கிமீ தொலைவு பயணிக்கும் திறுனுடன் விளங்குவதாக ஆராய் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இந்த காரில் ஈக்கோ, கம்ஃபார்ட் , மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமாக டிரைவிங் மோடுகள் உள்ளன.

0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 9.7 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்ளும். முழுமையான பேட்டரி சார்ஜிங் செய்வதற்கு 50kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் அதிகபட்சமாக 57 நிமிடங்களில் முழுமையான சார்ஜிங் செய்ய இயலும். மேலும், சாதாரன ஏசி சார்ஜர் வாயிலாக 6 மணி நேரம் 10 நிமிடங்கள் எடுத்துக் கொள்ளும். இதன் அடிப்படையிலான மாடலை 2020 ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

ஆதாரம் – Thekeea.com