3 ஸ்டார் ரேட்டிங் பெற்ற கியா செல்டோஸ் – கிராஷ் டெஸ்ட்

Kia Seltos crashtest global ncap

இந்தியாவில் கியா மோட்டார்ஸ் வெளியிட்ட முதல் மாடலான செல்டோஸ் காரின் இரண்டு ஏர்பேக்குகள் பெற்ற காரின் Safer Cars For India கிராஷ் டெஸ்ட் மோதலில் 3 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை மட்டுமே பெற்று கியா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கியா செல்டோஸ் காரினை உலகளாவிய புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (Global New Car Assessment Programme – Global NCAP) மையத்தின் கிராஷ் டெஸ்ட் சோதனையில் மணிக்கு 64 கிமீ வேகத்தில் செல்டோஸ் HTE இரண்டு ஏர்பேக் பெற்ற வேரியண்ட் மோத வைத்து சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற கார்களில் ஒன்றாக இந்த மாடல் விளங்குகின்றது.

குளோபல் என்.சி.ஏ.பி-யின் சோதனை அறிக்கையில், செல்டோஸின் கட்டுமானம் மற்றும் கால் வைக்கின்ற பகுதி  ‘நிலையற்றது’ என்றும், பாடிஷெல் ‘மேலும் பளுவை தாங்கும் ’ திறன் கொண்டதல்ல என்று குறிப்பிட்டுள்ளது.

ஓட்டுநர் மற்றும் முன் பயணிகளின் தலை, கழுத்து மற்றும் முழங்கால்களுக்கு நல்ல பாதுகாப்பையும், மார்புக்கு போதுமான பாதுகாப்பினை ஓட்டுநருக்கு வழங்கவில்லை, டேஸ்போர்டிற்கு பின்னால் காரின் நிலைப்புதன்மை குறிப்பிடும்படி இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

வயதுவந்தோர் பாதுகாப்பில் செல்டோஸ் மாடலுக்கு 17 புள்ளிகளில் 8.03 புள்ளிகளைப் பெற்றுள்ளது.  குழந்தை சார்ந்த பாதுகாப்பு அமைப்பில் 49 புள்ளிகளுக்கு 15.0 புள்ளிகளை மட்டுமே எடுத்துள்ளது. எனவே, இந்த காரின் வயது வந்தோர் பாதுகாப்பு 3 நட்சத்திரமும், குழந்தைகள் பாதுகாப்பில் 2 நட்சத்திரமும் பெற்றுள்ளது. குறிப்பாக 3 வயதுக்கு உட்பட குழந்தைகளின் பாதுகாப்பில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.

SaferCarsForIndia kia seltos

2020 Safer Cars For India திட்டத்தில் சோதனை செய்யப்பட்ட ஹூண்டாய் கிராண்ட் ஐ10 இரண்டு ஏர்பேக்குகளை பெற்ற மாடல் 2 நட்சத்திர மதிப்பீட்டையும், மாருதி எஸ்-பிரெஸ்ஸோ ஒரு ஏர்பேக்குகளை பெற்ற மாடல் பூஜ்ய நட்சத்திர பாதுகாப்பினை மட்டுமே கொண்டுள்ளது.

குறிப்பாக முன்பாக சோதனை செய்யபட்ட மாடல்களில் டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா அல்ட்ராஸ் என இரு மாடல்கள் மட்டும் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றிருப்பதுடன் 4 நட்சத்திர மதிப்பீட்டை டியாகோ டிகோர் ஆகியவை பாதுகாப்பினை உறுதி செய்த மாடல்களாகும்.

We title : Kia Seltos scores three stars in Global NCAP crash tests