கியாவின் எஸ்பி கான்செப்ட் செல்டோஸ் என பெயரிடப்பட்டுள்ளது

கியா செல்டாஸ்

கியா மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதல் கார் மாடலாக கியா செல்டோஸ் (Kia Seltos) விற்பனைக்கு வரவுள்ளது. முன்பாக 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கியா எஸ்பி எனவும் பின்பு எஸ்பி2ஐ என்ற பெயரிலும் காட்சிப்படுத்தப்பட்டது.

ஜூன் 20 ஆம் தேதி முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ள செல்டோஸ் காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷனுடன் நவீன தலைமுறையினர் விரும்பும் ஸ்மார்ட் டெக் வசதிகளை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கியா செல்டோஸ் எதிர்பார்ப்புகள்

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள செல்டாஸில், ஹூண்டாயின் ப்ளூலிங்க் டெகனாலாஜி மற்றும் எம்ஜி ஹெக்டர் காரில் இடம்பெற உள்ள ஐஸ்மார்ட் போன்ற கனெக்டேட் வசதியை கொண்டிருக்கும்.

Seltos பெயரின் பின்னணி 

கிரேக்கர்களின் தெய்வங்கள் மற்றும் மாவீரர்கள் என அறியப்படுகின்ற ஹெர்குலிஸ் (Herclues) மகன் பெயர் செல்டாஸ் (Celtus) என்பதாகும். இந்த பெயரின் அடிப்படையில் S சேர்க்கப்பட்டுள்ளது. S என்பதற்கு ஸ்பீடு, ஸ்போர்ட்டிவ் மற்றும் ஸ்ட்ரென்த் என (‘speed, sportiness மற்றும் strength) குறிப்பிடப்படுகின்றது.

எஸ்யூவி மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கலாம். இதுதவிர 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கலாம். ஆனால் 1.4 லிட்டர் என்ஜின் பற்றி உறுதியான தகவல் இல்லை.

செல்டோஸ் காரின் இன்டிரியரில் 10.25 அங்குல அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி காரைச் சுற்றி காண்பதற்கான கேமரா, வயர்லெஸ் சார்ஜர் , கார் வை-ஃபை உள்ளிட்ட அம்சங்களுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்றவறை கொண்டிருக்கலாம். கியா செல்டோஸ் எஸ்யூவி விலை ரூபாய் 9 லட்சம் முதல் ரூபாய் 15 லட்சம் வரை அமைந்திருக்கலாம்