Home Car News

கியா சொனெட் எஸ்யூவி கார் அறிமுகம்

இந்தியாவின் 4 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட காம்பேக்ட் ரக எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக புதிய கியா சொனெட் எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீல் என மூன்று என்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது.

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் கார்னிவல் வெற்றியை தொடர்ந்து வந்துள்ள மூன்றாவது மாடலான கியாவின் சொனெட் இந்நிறுவனத்தின் பங்களிப்பினை மேலும் அதிகப்படுத்தும். இந்திய சந்தையில் நுழைந்த 11 மாதங்களில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான கார்களை விற்பனை செய்துள்ளது.

கியா சொனெட் தோற்றம்

ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் முதன்முறையாக கியாவின் சொனெட் கான்செப்ட் என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டு, தற்போது உற்பத்தி நிலை மாடலாக வந்துள்ளது. ஒரு சில டிசைன் மாற்றங்களை தவிர மற்றபடி கான்செபட்டினை நேரடியாக உற்பத்திக்கு கியா மோட்டார்ஸ் கொண்டு வந்துள்ளது.

உற்பத்தி நிலை மாடல் குறித்து இந்நிறுவனம் குறிப்பிடுகையில் குட்டி யானையின் தும்பிக்கை போன்ற அமைப்பின் சில்வர் கார்னிஷ் மூலம் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு இந்நிறுவனத்தின் பாரம்பரியமான Tiger Nose’ கிரில் கீழ் பகுதியில் வழங்கி நேர்த்தியாக கொடுக்கப்பட்டு எல்இடி முகப்பு விளக்குடன் கூடிய எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் சேர்க்கப்பட்டு, முன்புற பம்பர் பகுதியில் பனி விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த காரின் GT Line வேரியண்டுகளில் சிவப்பு நிறம் பரவலாக சேர்க்கப்பட்டுள்ளது.

பக்கவாட்டில் கான்செப்ட் மாடலை போலவே வடிவமைக்கப்பட்டு 16 அங்குல ஆலாய் வீல் இணைக்கப்பட்டுள்ளது. பின்புற பகுதியில் எல்இடி டெயில் லைட்டில் இதய துடிப்பு போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும் வடிவமைப்பு, நீளமான பார் லைட் இணைக்கப்பட்டு, பம்பர் அமைப்பு மற்றும் சி பில்லரில் உள்ள ஸ்பாய்லர் அகலமாக கொடுக்கப்பட்டிருப்பதுடன் சரிவாக அமைந்துள்ளது.

கியா சோனெட் காரில் 10 விதமான வண்ண விருப்பங்களில் வரவுள்ளது. அவற்றில் 3 டூயல் டோன் நிறங்களாக (சிவப்பு + கருப்பு, வெள்ளை + கருப்பு, பழுப்பு தங்கம் + கருப்பு) மற்றும் மற்ற 7 நிற்கள் வெள்ளை, சில்வர், கிரே, சிவப்பு, கருப்பு,நீலம் மற்றும் கோல்டு ஆகும்.

ஒட்டுமொத்த கியா சொனெட் எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பு முதல்முறை கார் வாங்கும் இளைய தலைமுறையினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கியா சொனெட் இன்டிரியர் வசதிகள் என்ன ?

கியா செல்டோஸ் காரில் கொடுக்கப்பட்டதை போன்றே இந்த மாடலில் வழங்கப்பட்டுள்ள 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் காரின் இன்டிரியரில் தனி கவனம் பெறுவதுடன், Uvo கனெக்ட்டிவட்டி மூலமாக 57 வசதிகளை பெற இயலும். அதே நேரத்தில் குறைந்த வசதி பெற்ற பேஸ் வேரியண்டில் 2 டின் ஆடியோ சிஸ்டம் மட்டும் இடம்பெற்றிருக்கும். கியா சொனெட் காரின் இன்டிரியரில் GT Line வேரியண்டில் மட்டும் GT Line லோகோ இருக்கைகளில் வழங்கப்பட்டிருக்கும்.

மூன்று ஸ்போக் பெற்ற ஸ்டீயரிங் வீலுடன் மிக நேர்த்தியாக ஆட்டோமேட்டிக் ஏசி வென்ட் கொடுக்கப்பட்டு, சென்டர் ஆர்ம் ரெஸ்ட், 7 ஸ்பீக்கர்களுடன் போஸ் சவுன்ட் சிஸ்டம், காற்று சுத்திகரிப்பு, டயர் பிரஷர் மானிட்டர், சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷன், ரியர் பார்க்கிங் சென்சார் உள்ளிட்ட வசதிகளுடன் விளங்குகின்றது.

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, பிரேக் அசிஸ்ட், இஎஸ்சி, வாகனத்தின் நிலைப்புதன்மை பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

கியா சொனெட் இன்ஜின் விபரம்

120 HP குதிரைத்திறன் மற்றும் 172 Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 83 ஹெச்பி குதிரைத்திறன் மற்றும் 115 என்எம் முறுக்குவிசை வெளிப்படுத்தும் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் ஆகியவற்றினை பெற உள்ளது. 1.5 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் என மூன்று ஆப்ஷனை பெற உள்ளது.

இந்த காரில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ், 7 வேக DCT ஆட்டோமேட்டிக் மற்றும் பதிதாக வரவுள்ள ஐஎம்டி கியர்பாக்ஸ் தேர்வும் கிடைக்க உள்ளது. மேலும் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் முதன்முறையாக கியா சோனெட் டீசல் காரில் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பெற உள்ளது.

சொனெட் காரின் போட்டியாளர்கள் யார் ?

4 மீட்டருக்கு குறைவான நீளத்தில் கிடைக்கின்ற தனது தாய் நிறுவனத்தின் ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் வரவுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர், நிசான் மேக்னைட் மற்றும் இறுதியாக ரெனோ கைகெர் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

மிகவும் கடும் சவால் நிறைந்த இந்த சந்தையில் சொனெட் கார் மிகவும் திறம்பட நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கியாவின் சொனெட் விலை மற்றும் விற்பனைக்கு எப்போது ?

கியா சொனெட் எஸ்யூவி காரின் ஆரம்ப விலை ரூ.7 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.12 லட்சம் வரை விற்பனைக்கு வெளியிடப்படலாம். ஆகஸ்ட் மாத மத்தியில் முன்பதிவு துவங்கப்பட்டு, செப்டம்பர் மாத துவக்கத்தில் விற்பனைக்கு வெளியாகலாம்.

Exit mobile version