Automobile Tamilan

புதிய கியா Sonet எஸ்யூவி காரின் சிறப்பு விமர்சனம்

4 மீட்டருக்கு நீளம் குறைவான சந்தையில் வந்துள்ள கியா மோட்டார் நிறுவனத்தின் புதிய Sonet எஸ்யூவி மாடலின் சிறப்புகளுடன் விமர்சனத்தை அறிந்து கொள்ளலாம். இந்நிறுவனம் இந்திய சந்தையில் தனது மூன்றாவது மாடலாக சொனெட் காரினை வெளியிடுகின்றது.

முன்பாக கியா இந்தியாவில் வெளியிட்ட முதல் மாடலான செல்டோஸ் மிக சிறப்பான வரவேற்பினை பெற்று ஒரு வருடத்திற்குள் ஒரு லட்சம் விற்பனை எண்ணிக்கையை கடந்துள்ளது. அடுத்தப்படியாக, வெளியான பிரீமியம் கார்னிவல் எம்பிவி காரின் மீதான வரவேற்பும் சிறப்பாக உள்ளது.

கியா Sonet எஸ்யூவி

ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ எஸ்யூவி காரின் அடிப்படையிலான பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய சொனெட்டின் அடிப்படையான பல்வேறு அம்சங்கள் இங்கே இருந்து பெற்றிருந்தாலும் இரு மாடல்களுக்கு இடையிலான வித்தியாசம் பெரிதாக அமைந்துள்ளதால், இரண்டும் ஒன்று கிடையாது.

ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் முதன்முறையாக காட்சிப்படுத்தப்பட்ட கியா சொனெட் கான்செப்ட் காரிலிருந்து நேரடியான உற்பத்தி நிலை மாடல் அமைந்துள்ளது. முகப்பில் கியாவின் பாரம்பரிய டைகர் நோஸ் கிரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட் கிரில் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. டெக் லைன் மாடலை விட ஜிடி லைன் வேரியண்டின் ஸ்டைலிங் அம்சங்கள் மிகவும் கவர்ச்சிகரமாக அமைந்துள்ளது.

பக்கவாட்டு தோற்ற அமைப்பில் மிகவும் ஸ்டைலிஷான 16 அங்குல அலாய் வீல், மிக நேர்த்தியான வீல் ஆர்சு, சி பில்லரில் வழங்கப்பட்டுள்ள நேர்த்தியான கிளாடிங் கொண்டுப்பட்டுள்ளது. பின்புறத்தில் எல்இடி டெயில் லைட்டில் இதய துடிப்பு போன்ற தோற்றத்தை வெளிப்படுத்தும் வடிவமைப்பு, நீளமான பார் லைட் இணைக்கப்பட்டுள்ளது.

கவர்ச்சியான தோற்ற அமைப்பு, டூயல் டோன் நிறங்கள், 16 அங்குல அலாய் வீல் மாடலுடன் ஜிடி லைன் மிகவும் ஸ்டைலிஷாக அமைந்துள்ளது.

10 விதமான வண்ண விருப்பங்களில் கிடைக்க உள்ள இந்த மாடலில் 3 டூயல் டோன் நிறங்களாக (சிவப்பு + கருப்பு, வெள்ளை + கருப்பு, பழுப்பு தங்கம் + கருப்பு) மற்றும் மற்ற 7 நிறங்கள் வெள்ளை, சில்வர், கிரே, சிவப்பு, கருப்பு, நீலம் மற்றும் கோல்டு ஆகும்.

சொனெட் இன்டிரியர் வசதிகள்

சொனெட் காரின் இன்டிரியர் அமைப்பில் மிக நேர்த்தியாக கொடுக்கப்பட்டுள்ள டேஸ்போர்டின் மத்தியில் மிக சிறப்பான 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு UVO கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்களில் 57க்கு அதிகமான பிரத்தியேகமானவை பெற்றுள்ளது. இலகுவாக ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் வாயிலாக இணைப்பினை ஏற்படுத்தலாம்.

முன்புற இருக்கைகளுகுக்கான இடவசதி மிகவும் தாராளமாக அமைந்திருந்தாலும், பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள இருக்கையில் மூன்று நபர்கள் அமருவது மிக சிரமமாகவும், கால் வைப்பதற்கான இடவசதி, மேற்பகுதியில் தலைக்கான இடவசதி சற்று குறைவாக அமைந்துள்ளது.

இன்டிரியரில் குறிப்பிடதக்க வசதிகளில், மூன்று ஸ்போக் பெற்ற ஸ்டீயரிங் வீலுடன் மிக நேர்த்தியாக ஆட்டோமேட்டிக் ஏசி வென்ட் கொடுக்கப்பட்டு, சென்டர் ஆர்ம் ரெஸ்ட், 7 ஸ்பீக்கர்களுடன் போஸ் சவுன்ட் சிஸ்டம், கோவிட்-19 வைரஸ் உட்பட கிருமிகளை தடுப்பிற்கான காற்று சுத்திகரிப்பு, டயர் பிரஷர் மானிட்டர், சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜிங் ஆப்ஷன், ரியர் பார்க்கிங் சென்சார் போன்றவை உள்ளது.

இன்டிரியரில் அதிகப்படியான நவீனத்துவமான கனெக்ட்டிவிட்டி வசதிகள், சொகுசான இருக்கை அமைப்பு, பின்புற இருக்கையில் போதிய இடவசதி இல்லாமல் அமைந்திருப்பது பின்னைடவே..!

கியா சொனெட் இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்

இரண்டு பெட்ரோல், ஒரு டீசல் இன்ஜினில் இரண்டு விதமான பவர் ஆப்ஷன் என மூன்று இன்ஜின் மற்றும் 5 கியர்பாக்ஸ் ஆப்ஷனை வழங்கி மொத்தமாக 17 விதமான வேரியண்டுகளை கியா வழங்குகின்றது.

சொனெட்டில் இடம்பெற உள்ள இன்ஜின் ஆப்ஷன் அட்டவனை..

1.0-litre turbo-petrol

1.2-litre petrol

1.5-litre diesel

பவர்

120PS

83PS

100PS/ 115PS

டார்க்

172Nm

115Nm

240Nm/ 250Nm

கியர்பாக்ஸ்

6-speed iMT/ 7-speed DCT

5-speed MT

6-speed MT/ 6-speed AT

மைலேஜ்

18.2km/l (iMT)/18.3km/l(DCT)

18.4 km/l

24.1km/l (MT)/19km/l(AT)

 

120ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 172 என்எம் டார்க் வழங்குவதுடன் 6 வேக ஐஎம்டி கியர்பாக்ஸ் மற்றும் டிசிடி மட்டுமே பெறுகின்றது. மேனுவல் கியர்பாக்ஸ் இல்லை. வென்யூ காரில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின் தான், ஆரம்ப நிலை பிக்கப் மற்றும் சீரான டிரைவிங் ஃபெர்ஃபாமென்ஸ் வழங்குவதில் முன்னணி வகிக்கின்றது. கூடுலாக வழங்கப்பட்டுள்ள கிளட்ச்லெஸ் கியர் ஷிஃப்ட் அனுபவத்தினை வழங்கும் ஐஎம்டி மாடலும் சிறப்பாகவே உள்ளது. ஐஎம்டி மாடலை விட டிசிடி இங்கே சிறப்பாக அமைந்துள்ளது.

மேனுவல் கியர்பாக்ஸ் வழங்காதது மிகப்பெரிய பின்னடைவாகும்.

டீசல் இன்ஜின் மேனுவல் கியர்பாக்ஸ் பெற்ற மாடல் 100 ஹெச்பி பவரை வழங்குவதுடன் fixed-geometry-turbo நுட்பத்தை கொண்டுள்ளது. ஆனால் ஆட்டோமேட்டிக் மாடல் variable-geometry பெற்று 115 ஹெச்பி பவரை வழங்குகின்றது.

கிரெட்டா, வெர்னா, செல்டோஸ் கார்களில் உள்ளதை போன்றே பவர் மற்றும் டார்க்கினை வழங்கும் இந்த இன்ஜின் மிக சிறப்பான இலகுவான முறையிலான செயல்திறனை டார்க் கன்வெர்ட்டர் பெற்ற ஆட்டோமேட்டிக் மாடல் வழங்குகின்றது. மேனுவல் மாடலை பொறுத்தவரை இலகுவான கியர் ஷிஃப்ட் மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது.

சொனெட் காரின் ஒட்டுமொத்த டிரைவிங் டைனமிக்ஸ் மிக சிறப்பாகவும், இலகுவான ஸ்டீயரிங், கியர் ஷிஃப்ட், நகரப்பயன்பாட்டிற்கு மிகவும் ஏற்றதான மாடலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாடலில் ஈக்கோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடு கொடுக்கப்பட்டுள்ளது. டிராக்‌ஷன் கன்ட்ரோல் அமைப்பினை பொறுத்தவரை , Snow, Mud மற்றும் Sand கொடுக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் டிஸ்க் மற்றும் பின்புற டயர்களுக்கு டிரம் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

டீசல் இன்ஜினில் முதன்முறையாக காம்பாக்ட் எஸ்யூவி பிரிவில் ஆட்டோமேட்டிக் பெற்ற காராக சோனெட் விளங்குகின்றது.

சோனெட் பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, டாப் வேரியண்டில் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி, பிரேக் அசிஸ்ட், இஎஸ்சி, வாகனத்தின் நிலைப்புதன்மை பராமரிப்பு உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

சொனெட் போட்டியாளர்கள்

ஹூண்டாய் வென்யூ, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300 மற்றும் வரவுள்ள டொயோட்டா அர்பன் க்ரூஸர், நிசான் மேக்னைட் இறுதியாக ரெனோ கைகெர் போன்றவற்றை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

கியா சொனெட் விலை எதிர்பாப்புகள்

வரும் செப்டம்பர் 18 ஆம் தேதி விலை அறிவிக்கப்பட உள்ள கியா Sonet விலை ரூ.6.50 லட்சம் முதல் ரூ.12 லட்சத்திற்குள் அமைந்திருக்கலாம்.

Exit mobile version