50,000 முன்பதிவுகளை கியா சொனெட் எஸ்யூவி கடந்தது

0

Kia Sonet front view

இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்ட இரண்டு மாதங்களில் கியா சொனெட் எஸ்யூவி காரின் முன்பதிவு எண்ணிக்கை 50,000 கடந்துள்ளது. ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு இரண்டு சொனெட் கார்கள் முன்பதிவு செய்யப்படுகின்றது.

Google News

சொனெட்டினை முன்பதிவு செய்வோரில் 60 சதவீத புக்கிங் பெட்ரோல் மற்றும் 40 சதவீத கார்கள் டீசல் இன்ஜின் மாடல்களுக்கு பெற்றுள்ளது. இந்நிறுவனம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் என மூன்று விதமான இன்ஜின் தேர்வுகளை வழங்குகின்றது. பேஸ் வேரியண்ட் ரூ.6.71 லட்சத்தில் துவங்கி அதிகபட்ச வசதிகளை பெற்ற டாப் வேரியண்ட் விலை ரூ.12.89 லட்சம் (விற்பனையக விலை, இந்தியா) ஆக நிர்ணையிக்கப்பட்டுள்ளது.

சொனெட் இன்ஜின் மற்றும் மைலேஜ் விபரம்

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல்

1.2 லிட்டர் பெட்ரோல்

1.5 லிட்டர் டீசல்

பவர்

120PS

83PS

100PS/ 115PS

டார்க்

172Nm

115Nm

240Nm/ 250Nm

கியர்பாக்ஸ்

6-speed iMT/ 7-speed DCT

5-speed MT

6-speed MT/ 6-speed AT

மைலேஜ்

18.2km/l (iMT)/18.3km/l(DCT)

18.4 km/l

24.1km/l (MT)/19km/l(AT)

 

இந்திய சந்தையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய நிசான் மேக்னைட் எஸ்யூவி கார் மிக கடுமையான போட்டியை ஏற்படுத்தும். இதுதவிர, மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான், டொயோட்டா விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் போன்றவற்றை எதிர்கொள்ளுகின்றது.

Web Title : Kia Sonet suv bookings cross 50,000 units