Automobile Tamilan

வரவிருக்கும் கியா SP எஸ்யூவி ஸ்கெட்ச் வெளியானது

கியா SP SUV

இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் கியா நிறுவனத்தின் முதல் கியா SP எஸ்யூவி ரக காரின் அதிகார்ப்பூர்வ ஸ்கெட்ச் படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு அடுத்த மாதம் எஸ்பி எஸ்யூவி கார் வெளியிட வாய்ப்புகள் உள்ளது.

கியா மோட்டார்ஸ் நிறுவன ஆலை ஆந்திரா மாநிலத்தின் அனந்தப்பூர் பகுதியில் தொடங்கப்படுள்ளது. தென் கொரியாவைச் சேர்ந்த இந்நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஹூண்டாய் ஆகும்.

கியா SP எஸ்யூவி எதிர்பார்ப்புகள்

கடந்த 2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் முதன்உறையாக காட்சிக்கு வந்த கியா எஸ்பி காரின் உற்பத்தி மற்றும் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகின்றது. அடுத்த மாத மத்தியில் அதிகார்வப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த காரின் விற்பனை ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.

ஹூண்டாயின் கிரெட்டா காருக்கு இணையாக வெளியாக உள்ள எஸ்பி காரில் பல்வேறு டெக் கனெக்ட்டிவிட்டி வசதிகளை உள்ளடக்கியதாக விளங்கும். அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 360 டிகிரோ காரைச் சுற்றி காண்பதற்கான கேமரா, வயர்லெஸ் சார்ஜர் , கார் வை-ஃபை உள்ளிட அம்சங்களுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்றவறை கொண்டிருக்கலாம்.

இந்நிறுவனத்தின் பாரம்பரிய டைகர் நோஸ் கிரில் , ஸ்டைலிஷான பம்பருடன் கூடிய நேர்த்தியான எல்இடி ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகள், எல்இடி டெயில் விளக்குகள் உள்ளிட்ட அம்சங்களுடன் இரு புகைப்போக்கியை கொண்டிருக்கின்றது.

கியா எஸ்பி காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கலாம். இதுதவிர 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கலாம்.

வரவுள்ள எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனோ கேப்டூர் போன்ற மாடல்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி காரையும் கியா SP எஸ்யூவி எதிர்கொள்ள ரூ.9 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலைக்குள் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வரும் ஜூன் மாத மத்தியில் அறிமுகம் செய்யபட வாய்ப்புகள் உள்ளது.

 

 

Exit mobile version