Automobile Tamilan

புதிய கியா எஸ்பி எஸ்யூவி இன்டிரியர் படங்கள் வெளியானது

கியா SP SUV

கியா மோட்டார் இந்தியா நிறுவனம், தனது முதல் எஸ்யூவி ரக மாடலாக கியா எஸ்பி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது. SP2i எஸ்யூவி காரில் 10.25 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருக்கும்.

2018 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட கியா எஸ்பி கான்செப்ட் மாடலை அடிப்படையாக கொண்டதாகும். ஜூன் மாதம் மத்தியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கியா எஸ்பி எஸ்யூவி விபரம்

எஸ்பி காரில் டைகர் நோஸ் கிரில் , ஸ்டைலிஷான பம்பருடன் கூடிய நேர்த்தியான எல்இடி ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகள், எல்இடி டெயில் விளக்குகள் உள்ளிட்ட அம்சங்களுடன் இரு புகைப்போக்கியை கொண்டிருக்கின்றது.

கியா எஸ்பி2ஐ காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டு மேனுவல் மற்றும் ஆட்டோ கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெற்றிருக்கலாம். இதுதவிர 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கூடுதலாக டியூவல் கிளட்ச் ஆட்டோ கியர்பாக்ஸூடன் இடம் பெற்றிருக்கலாம்.

சமீபத்தில் வெளியான வென்யூ எஸ்யூவி காரில் உள்ளதை போன்ற ப்ளூலிங்க் நுட்பத்தினை இந்த காரும் பெற்றிருக்கும். 10.25 அங்குல அகலமான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, 360 டிகிரி காரைச் சுற்றி காண்பதற்கான கேமரா, வயர்லெஸ் சார்ஜர் , கார் வை-ஃபை உள்ளிட அம்சங்களுடன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர் போன்றவறை கொண்டிருக்கலாம்.

எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் சிஸ்டம், என்ஜின் ஸ்டார்ட் மற்றும் ஸ்டாப் பொத்தான் கொண்டதாகவும், க்ரூஸ் கன்ட்ரோல், மூட் லைட்டிங், ஸ்டீயரிங் பேடல் ஷீஃப்ட் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் கொண்டதாக அமைந்துள்ளது.

வரவுள்ள எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர், ஹூண்டாய் கிரெட்டா, நிசான் கிக்ஸ் மற்றும் ரெனோ கேப்டூர் போன்ற மாடல்களுடன் மஹிந்திரா எக்ஸ்யூவி 500 எஸ்யூவி காரையும் கியா SP எஸ்யூவி எதிர்கொள்ள ரூ.9 லட்சம் முதல் ரூ.15 லட்சம் விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version