2020 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த கார் கியா டெல்லுரைடு – WCOTY 2020

kia telluride

நியூ யார்க் மோட்டார் ஷோ ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாக உலக கார் 2020 பட்டியல் வெளியிடப்படுள்ளது. அந்த வகையில் சிறந்த கார் மாடலாக கியா டெல்லுரைடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் 86 முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் இடம்பெற்றுள்ள சிறந்த கார் தேர்வு முறையில் பங்கேற்ற பல்வேறு கார்களில் முதல் இடங்களை பிடித்த மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த 6 முன்னணி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

உலக சிறந்த கார் மட்டுமல்லாமல் உலக சொகுசு கார், உலக  பெர்ஃபாமென்ஸ் கார் , உலக சுற்றுசூழல் கார் , உலகின் சிறந்த அர்பன் கார் மற்றும் உலகின் சிறந்த டிசைன் கார் என மொத்தம் 6 பிரிவுகளில் வழங்கப்படுகின்றது.

2020 உலக கார் விருதுகளுக்கான இறுதிப் போட்டிகளில் கியா டெல்லுரைடு வெற்றிப் பெற்றுள்ளது.

கியா சோல் இ.வி மாடல் 2020 உலக நகர கார் விருது (Urban car) பட்டியிலில் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் உலகின் சொகுசு கார் பிரிவில் போர்ஷே டேகென் தேர்வாகியுள்ளது.

Porsche Taycan ev

2020 உலக பெர்ஃபாமென்ஸ் காருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று இடங்களில் போர்ஷே நிறுவனமே பெற்றிருந்த நிலையில் போர்ஷே டேகென் கைப்பற்றியுள்ளது.

இறுதியாக 2020 உலக சிறந்த டிசைன் அமைப்பில் மஸ்தா 3 வெற்றிப் பெற்றுள்ளது.