Automobile Tamilan

பவர்ஃபுல்லான லம்போர்கினி சியன் ஹைபிரிட் கார் அறிமுகம்

Lamborghini Sian

2019 பிராங்பர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வரவுள்ள லம்போர்கினி சியன் ஹைபிரிட் ஸ்போர்ட்டிவ் காரை இந்நிறுவனம் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. 63 யூனிட்டுகளை மட்டுமே தயாரிக்க உள்ளது.

சியன் லம்போர்கினியின் பாரம்பரியமான டிஎன்ஏ தாத்பரியத்தை பெற்றதாக வடிவமைக்கப்பட்டு வந்துள்ளது. வி12 என்ஜின் பெற்று ஹைபிரிட் தொழில்நுட்பத்தை பெற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் நவீனத்துவமான எலக்ட்ரிக் நுட்பத்தையும் பெற்றதாக வந்துள்ளது.

அவென்டேடோர் SVJ காரில் உள்ள 6.5 லிட்டர் 12 சிலிண்டர் கொண்டதாக 759 பிஹெச்பி பவரிலிருந்து 774 பிஹெச்பி வரை டைட்டானியம் பெற்றதாக வால்வுகளைச் சேர்த்து உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் இது 48 வோல்ட் மின்சார மோட்டருடன் 34 பிஹெச்பி உற்பத்தி செய்கிறது. மொத்த உற்பத்தி 819 பிஹெச்பி பெற்றதாக வரவுள்ளது. முதன்முறையாக குறைந்த வோல்டேஜ் பெற்ற ஹைபிரிட் பவர்ட்ரெயின் ஆனது கியர்பாக்ஸ் வீல் உடன் இணைக்கப்பட்டு குறைந்த வேக ரிவர்ஸ் மற்றும் பார்க்கிங் நேரங்களில் உதவுகின்றது.

0-100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டுவதற்கு வெறும் 2.8 விநாடிகள் மட்டும் எடுத்துக் கொள்வதுடன், அதிகபட்ச வேகம் மணிக்கு 350 கிமீ ஆக விளங்கும்.

63 யூனிட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது. ஆனால் இது லம்போர்கினியின் மிக வேகமான கார் அல்ல என்றாலும் பல்வேறு பிரத்தியேகமான வசதிகளை பெற்றதாக இந்த கார்கள் விளங்க உள்ளது. 63 கார்களும் முன்பே விற்பனை செய்யப்பட்டு விட்டது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

Exit mobile version