மஹிந்திரா e2o பிளஸ்,மஹிந்திரா

மஹிந்திரா எலெக்ரிக் பிரிவினால் வெளியிடப்பட்ட e2o பிளஸ் காருக்கு குறைந்த வரும் வரவேற்பு மற்றும் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் போன்ற காரணங்களால் உற்பத்தியை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இ2ஓ பிளஸ் நிறுத்தப்பட்டாலும், மஹிந்திரா நிறுவனம் புதிய eKUV100 எலெக்ட்ரிக் எஸ்யூவி காரினை வரும் பண்டிகை காலத்துக்கு முன்னதாக விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. இதனை தொடர்ந்து மஹிந்திரா எக்ஸ்யூவி300 காரையும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வெளியிட உள்ளது.

மஹிந்திரா e2o பிளஸ்

110-140 கிமீ தொலைவை சிங்கிள் சார்ஜ் மூலம் பயணிக்கும் திறன் கொண்ட இந்த கார் மாடல் இந்தியாவில் குறைந்த வரும் வரவேற்பு மற்றும் அக்டோபர் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு உற்பத்தியை நிறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஆனால் ஏற்றுமதி சந்தைகளான நேபால், இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

மஹிந்திரா e2o பிளஸ்,மஹிந்திரா

தற்போது விற்பனையில் உள்ள பேட்டரி பேக் மூலம் அதிகபட்சமாக P8 வேரியன்டில் 140 கிமீ தொலைவு பயணிக்கலாம். அதே நேரத்தில் மற்ற P2, P4, P6 போன்ற வேரியண்டுகள் 110 கிமீ பயணிக்கும் திறன் கொண்டதாக கிடைத்து வந்தது. மேலும் இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ள  3 kW சிங்கிள் பேஸ் 16 Amp முறையில் அதிகபட்சமாக 7 மணி நேரம் 30 நிமிடங்கள் சார்ஜாகின்ற நிலையில், 10 kW சிங்கிள் பேஸ் 32 Amp சார்ஜர் மூலம் அதிகபட்சமாக 1 மணி நேரம் 35 நிமிடங்களளில் சார்ஜாகும்.

வரும் பண்டிகை காலத்துக்கு முன்னதாக புதிய எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த எஸ்யூவி கார் மாடலானது பிரபலமான மஹிந்திரா கேயூவி100 அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அடுத்த எஸ்யூவி காரை 2020 ஆம் ஆண்டின் மத்தியில் எக்ஸ்யூவி 300 அடிப்படையில் வெளியிட உள்ளது.