Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
  • செய்திகள்
  • கார்
  • பைக்
  • EV News
  • Stories
  • வணிகம்
  • மோட்டார் ஷோ
  • டிரக்
  • பேருந்து
  • ஆட்டோ டிப்ஸ்
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result
Home செய்திகள் கார் செய்திகள்

டீசல் என்ஜின் பெற்ற கேயூவி100 எஸ்யூவி காரை நீக்கும் மஹிந்திரா

by Automobile Tamilan
2019/06/05
in கார் செய்திகள்
0
74
SHARES
ShareRetweet

மினி எஸ்யூவி கார் என அழைக்கப்படுகின்ற மஹிந்திரா கேயூவி100 எஸ்யூவி காரில் விற்பனை செய்யப்படுகின்ற டீசல் என்ஜினை பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றும் திட்டத்தை மஹிந்திரா அண்டு மஹிந்திரா கைவிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

பிஎஸ் 6 நடைமுறைக்கு டீசல் பிரிவில் மொத்தமாக எட்டு டீசல் என்ஜின்களை உற்பத்தி செய்ய உள்ளது. வரவுள்ள மாசு கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப என்ஜினை தயாரிக்க ரூ.10,000 கோடி முதலீட்டை மஹிந்திரா மேற்கொண்டுள்ளது. ஆனால் 1.2 லிட்டர் எம் ஃபால்கான் D75  டீசல் என்ஜின் புதிய மாசு விதிகளுக்கு மாற்றும் திட்டத்தை கைவிட்டுள்ளது.

மஹிந்திரா பிஎஸ் 6

தற்போது விற்பனையில் உள்ள 77 bhp @ 3750 ஆர்பிஎம் யில் வழங்கும் 1198cc எம் ஃபால்கான் D75 டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 190 Nm 1750 முதல் 2250 ஆர்பிஎம் ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. டீசல் KUV100 காரில் பவர் மற்றும் இக்கோ மோட் உள்ளது.

இந்த என்ஜின் பிஎஸ் 6 நடைமுறைக்கு மாற்றப்படும் போது மிக கடுமையான விலை ஏற்றத்தை சிறிய ரக கார் சந்திக்கும் என்பதனால் இந்த என்ஜினை ஸ்டாக் உள்ள வரை மட்டும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கேயூவி100 காரில் எம்ஃபால்கான் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் மட்டும் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

இந்த ஆண்டின் இறுதிக்குள் தனது அனைத்து மாடல்களிலும் பாரத் ஸ்டேஜ் 6 என்ஜின் மட்டும் பொருத்தப்பட்ட கார்கள் விற்பனை செய்ய மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

மஹிந்திராவின் பிஎஸ் 6 டீசல் என்ஜின்கள்

மஹிந்திரா நிறுவனம், 625சிசி மற்றும் 45 ஹெச்பி பவர் மற்றும் 98 என்எம் டார்க் வழங்கும் 909சிசி டீசல் என்ஜினை தயாரிக்க உள்ளது. இந்த என்ஜின் சுப்ரோ மற்றும் ஜீடூ மாடல்களில் கிடைக்கும். அடுத்தப்படியாக பொலிரோ பவர் பிளஸ் மற்றும் TUV300 கார்களில் பிஎஸ் 6 ரக 1,493cc மூன்று சிலிண்டர் என்ஜின் பெற்றிருக்கும்.

வெரிட்டோ காரில் 1,461cc நான்கு சிலிண்டர் என்ஜினும், XUV300 மற்றும் மராஸ்ஸோ கார்களில் 115hp பவர் மற்றும் 300Nm வெளிபடுத்தும் 1,497cc நான்கு சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அடுத்தப்படியாக 2.2 லிட்டர் மற்றும் 2.5 லிட்டர் என்ஜின்கள் வழங்க உள்ளது.

Tags: Mahindraமஹிந்திரா
Share30Tweet19SendShare

Recommended For You

ஆகஸ்ட் 18.., புதிய மாருதி சுஸுகி ஆல்டோ அறிமுகம்

by Automobile Tamilan
2022/07/27
0

வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாருதி சுஸுகி நிறுவனத்தின் மூன்றாம் தலைமுறை ஆல்டோ காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. தொடக்க நிலை ஹேட்ச்பேக் மாடல் புதிய பிளாட்ஃபாரம் மற்றும் புதிய பவர்டிரெய்ன் பெறும். மாருதி சுஸுகி...

Read more

சிட்ரோன் C3 எஸ்யூவி விலை விபரம் கசிந்தது

by Automobile Tamilan
2022/07/04
0

ரூ.6.25 லட்சம் முதல் ரூ.8.50 லட்சம் விலையில் விற்பனைக்கு சிட்ரோன் C3 எஸ்யூவி விலை அமையலாம். தற்போது இந்த காருக்கு முன்பதிவு துவங்கிய நிலையில் ஜூலை 20 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. Common Modular Platform (CMP)...

Read more

Toyota Hyryder SUV: டொயோட்டா ஹைரைடர் எஸ்யூவி அறிமுகம்

by Automobile Tamilan
2022/07/01
0

இந்தியாவிற்கான முதல் நடுத்தர அளவிலான எஸ்யூவியை டொயோட்டா நிறுவனம் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder)எஸ்யூவி வெளியிடப்பட்டுள்ளது. மாருதி சுசுகியுடன் இணைந்து தயாரித்துள்ளது. புதிய டொயோட்டா ஹைரைடர் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரும். டொயோட்டா டீலர்ஷிப்களிலும்...

Read more

2022 டிவிஎஸ் ரேடியான் பைக் விற்பனைக்கு வந்தது

by Automobile Tamilan
2022/07/01
0

ரூ. 59,925 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்துள்ள 2022 டிவிஎஸ் ரேடியான் பைக் மேம்படுத்தப்பட்ட வசதிகளை பெற்றதாக வந்துள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் XTEC மாடலுக்கு போட்டியாக அமைந்துள்ளது. புளூடூத் இணைப்புடன் கூடிய முழு டிஜிட்டல்...

Read more

₹.7.99 லட்சத்தில் 2022 மாருதி சுசூகி பிரெஸ்ஸா விற்பனைக்கு வந்துள்ளது

by Automobile Tamilan
2022/06/30
0

இந்தியாவின் காம்பேக்ட் எஸ்யூவி 2022 மாருதி சுசூகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) முன்னணி மாடலாக விளங்குகிறது. புதிய பிரெஸ்ஸா ₹.7.99 லட்சம் முதல் ₹13.96 லட்சம் வரையிலான விலையில் வெளியிடப்பட்டுள்ளது. விட்டாரா பிரெஸ்ஸா என்ற பெயர் நீக்கப்பட்டு...

Read more
Next Post

ரூ.7.22 லட்சத்தில் டொயோட்டா கிளான்ஸா விற்பனைக்கு வந்தது

Related News

ரூ.1.17 லட்சத்தில் பிஎஸ்6 பஜாஜ் பல்சர் 220F விற்பனைக்கு வெளியானது

2020/04/01

பிஎஸ்6 எம்ஜி ஹெக்டர் விற்பனைக்கு வெளியானது

2020/04/09

2020 லேண்ட் ரோவர் டிஃபென்டர் எஸ்யூவி அறிமுகமானது

2019/09/11

Browse by Category

  • Auto Expo 2023
  • Auto Show
  • Bus
  • Car & Bike Videos
  • Car and Bike Photos Tamil
  • Car Reviews
  • EV News
  • TIPS
  • Truck
  • Wired
  • கார் செய்திகள்
  • செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

No Result
View All Result
  • #59908 (no title)
  • About Us
  • Auto news in Tamil
  • Contacts Us
  • Fact-Checking Policy
  • Home
  • Homepage for Amp
  • Latest News
  • Meet The Team
  • My Bookmarks
  • Privacy Policy
  • Sample Page
  • Sitemap

© 2022 Automobile Tamilan

Exit mobile version