Site icon Automobile Tamilan

மஹிந்திராவின் U321 எம்பிவி பெயர் மஹிந்திரா மராஸ்ஸோ என அழைக்கப்படலாம்

வருகின்ற ஜூலை 31ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ள மஹிந்திரா நிறுவனத்தின் U321 எம்பிவி ரக மாடலின் பெயர் மஹிந்திரா மராஸ்ஸோ (Mahindra Marazzo) என அழைக்கப்படலாம் என்ற தகவல் கசிந்துள்ளது.

பொதுவாக மஹிந்திரா நிறுவனம் தனது மாடல்களின் பெயர் இறுதியில் O  என்ற ஆங்கில எழுத்தில் முடியும்படி வைத்து வரும் நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் Marazzo என்ற பெயரும் அமைந்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் உறுதிப்படுத்தப்பட்ட கணக்காக டிவிட்டரில் காண கிடைக்கின்றது. மஹிந்திரா நிறுவனத்தின் மஹிந்திரா வட அமெரிக்கா தொழிற்நுட்ப மையத்தால் வடிவமைக்கப்பட்ட முதல் மாடலாக விளங்குகின்ற இந்த எம்பிவி கார் பல்வேறு சொகுசு வசதிகளை கொண்டதாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மராஸ்ஸோ எம்பிவி காரில் புதிதாக உருவாக்கப்பட்ட 121 ஹெச்பி பவர், 300 என்எம் டார்க் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனுடன் விளங்கலாம். பெட்ரோல் எஞ்சின் குறித்தான உறுதியான தகவல் இல்லை. இன்டிரியர் அமைப்பில் 7 மற்றும் 8 இருக்கை என இருவிதமான தேர்வுகளை பெற்று விளங்குவதுடன் நவீன தலைமுறையினர் விரும்பும் வகையிலான இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஆப்பிள் கார் பிளே , ஆண்ட்ராய்டு ஆட்டோ, உள்ளிட்ட வசதிகளுடன் புராஜெக்ட்ர எல்இடி ஹெட்லைட், எல்இடி டெயில் லைட் போன்றவற்றை பெற்றிருக்கும்.

சந்தையில் உள்ள மஹிந்திரா சைலோ காருக்கு மாற்றாக நிலை நிறுத்தப்பட வாய்ப்புள்ள மராஸ்ஸோ எம்பிவி போட்டியாளர்களாக இன்னோவா க்ரிஸ்டா, லாட்ஜி, மாருதி எர்டிகா போஃற மாடல்கள் விளங்கும்.

Exit mobile version