மஹிந்திரா ராக்ஸர் யுட்டிலிட்டி வாகனம் அறிமுகம்

அமெரிக்காவில் மஹிந்திரா நிறுவனம் , ஆஃப் ரோடு பயன்பாட்டிற்கு என சிறப்பு வாகனமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்ற தார் அடிப்படையிலான மஹிந்திரா ராக்ஸர் ஆஃப் ரோடு வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

மஹிந்திரா ராக்ஸர்

அமெரிக்காவின் டெட்ராயட் நகரில் தொடங்கப்பட்டுள்ள மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் வட அமெரிக்கா (Mahindra Automotive North America – MANA) பிரிவவின் முதல் யுட்டிலிட்டி ரக மாடலாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராக்ஸார் வாகனம் மிக சிறப்பான வகையில் ஆஃப்  ரோடு சாலைகளுக்கு ஏற்றதாக மிகவும் நவீனத்துவமான நுட்பத்தை பெற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

64 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 சிலிண்டர் டர்போ 2.5 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது.  5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனை நிரந்தர அம்சமாக வழங்கப்பட்டுள்ள நிலையில் அமெரிக்கா ஆஃப்ரோடு நெடுஞ்சாலை விதிகளின் அடிப்படையில் அதிகபட்ச வேகம் மணிக்கு 72 கிமீ ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.

பவர்ஸ்போர்ட்ஸ் சந்தையில் மிக கடுமையான சவால்கள் நிறைந்த சாலையில் பயணிக்கும் திறன் வாய்ந்ததாக வடிவமைக்கப்பட்டுள்ள ராக்ஸர் மாடலில் அமெரிக்காவிற்கு ஏற்ற வகையில் வலதுபுற ஸ்டியரிங் அமைப்புடன், இன்டிரியர் அமைப்பில் டேஸ்போர்டில் பிளாஸ்டிக் போன்றவற்றை வழங்காமல் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், தற்போது மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் தனது வாகனங்களில் பயன்படுத்தி வரும் பாரம்பரிய 7 ஸ்லாட் கிரிலுக்கு மாற்றாக 5 ஸ்லாட் கொண்ட கிரிலை மட்டுமே வழங்கியுள்ளது.

இரு இருக்கைகளை மட்டுமே கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ராக்ஸர் ஆஃப் ரோடு வாகனத்தில், எதிர்காலத்தில் பல்வேறு கஸ்டமைஸ் வசதிகளை வழங்குவதுடன், 900 க்கு மேற்பட்ட நிறங்களில் வாகனத்தை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில் மஹிந்திரா வெளியிட்டுள்ளது

இந்த வாகனம் அமெரிக்காவின் பொது போக்குவரத்து சாலைகளில் பயன்படுத்த இயலாது, எனவே ஆஃப் ரோடுகளில் மட்டுமே பயணிக்கும் வகையிலா மஹிந்திரா ராக்ஸர் ஆரம்ப விலை $ 15,000 (ரூ. 10 லட்சம்) ஆகும்.

Recommended For You