மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவியின் ஏ.எம்.டி அறிமுகம் விபரம்

மஹிந்திரா எக்ஸ்யூவி300

4 மீட்டருக்கு குறைந்த நீளம் பெற்ற மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெற்ற கூடுதலான வேரியண்ட் அடுத்த மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளதாக மஹிந்திரா & மஹிந்திரா ஆட்டோமோட்டிவ் பிரிவு தரைவர் ராஜன் வதேரா கூறியுள்ளார்.

ஏ.எம்.டி எனப்படுகின்ற ஆட்டோமேட்டேட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் பெற்ற மாடல்களுக்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்ப்பு உள்ளது. பொதுவாக தானியங்கி கிய்பாக்ஸை விட குறைந்த விலையில் அமைந்திருப்பது இந்தியர்களின் விலை குறைந்த ஆட்டோமேட்டிக் என்கின்ற கவனத்தை பெற்றுள்ளது.

கடந்த 14ந் தேதி ரூ.7.90 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யூவி 300 எஸ்யூவி மாடலில் பெட்ரோல் 1.2 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளிலும் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் பெற்றதாக விற்பனைக்கு வெளியிடப்பட்டு நாடு முழுவதும் டெலிவரி தொடங்கப்பட்டுள்ளது.

Mahindra XUV300 SUV dashboard

வரவுள்ள ஏ.எம்.டி கியர்பாக்ஸ் பெட்ரோல் மற்றும் டீல் என இரு என்ஜின் தேர்வுகளில் விற்பனைக்கு அடுத்த மாதம் முதல் கிடைக்க உள்ளது. இந்த கார்களில் இடம்பெற உள்ள ஏ.எம்.டி கியர்பாக்சினை Magneti Marelli நிறுவனம் வழங்க உள்ளது. மேலும் தற்போது இந்நிறுவனம் பயன்படுத்தி வருகின்ற Aisin நிறுவன ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் BS-VI மாசு விதிகளுக்கு உட்பட்டு வெளியிடும் போது மாற்றப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்ப்டுகின்ற மாருதி விட்டாரா பிரெஸ்ஸா ஏ.எம்.டி, நெக்ஸான் ஏ.எம்.டி மற்றும் ஈக்கோஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் போன்ற மாடல்கள்க்கு சவாலாக விளங்கும். டாப் வேரியன்டின் அடிப்படையில் வெளியிடப்படலாம் என்பதால், ரூ.50,000 விலை அதிகரிக்கப்பட்டு ரூ.12.30 லட்சத்தில் மஹிந்திரா எக்ஸ்யூவி 300 ஏஎம்டி விற்பனைக்கு வரக்கூடும்.

மேலும் படிக்க ; மஹிந்திரா XUV300 மைலேஜ் மற்றும் விலை பட்டியல்

Exit mobile version