புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரில் நவீன வசதிகள் அறிமுகம்

0

பிரபலமான மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி மாடலில் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்பட பல நவீன ஆப் வசதிகளை பெற்றதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 4 வகையான புதிய வசதிகளை XUV500 பெற்றுள்ளது.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி500

  • ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஈக்கோசென்ஸ், கனெக்டேட் ஆப்ஸ் மற்றும் எமெர்ஜென்சி அழைப்பு வசதி வழங்கப்பட்டுள்ளது.
  • பல்வேறு விதமான ஆப்ஸ்கள் மற்றும் ஸ்மார்ட்போன் சேவைகளை பெறலாம்.
  • மொபைல் வைஃபை ஹாட்ஸ்பாட் இணைப்புடனும் இந்த வசதிகளை பெறலாம்.

W6 வேரியன்ட் முதல் வழங்கப்பட்டுள்ள கூடுதல் வசதிகளை தவிர W10 டாப் வேரியன்டில் புதிதாக பிரவுன் நிறமும் சேர்க்கப்பட்டுள்ளது.

W6 வேரியன்ட் முதல் கிடைக்கின்ற ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஈக்கோசென்ஸ், கனெக்டேட் ஆப்ஸ் மற்றும் எமெர்ஜென்சி அழைப்புகள் சேவையில் பல்வேறு நவீன வசதிகளை வழங்கியுள்ளது. குறிப்பாக  கனெக்டேட் ஆப்ஸ் வாயிலாக ப்ரீ லோடேட் ஆக கானா, கிரிக்கெட் லைவ், ஜூமேடா மற்றும் புக் மை ஷோ உள்பட மேலும் பல செயலிகள் வழங்கப்பட்டிருப்பதுடன், ம்யூசிக், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் மற்றும் ஃபிளாஷ் செய்திகளையும் பெறலாம்.

ஈக்கோசென்ஸ் வசதியில் எரிபொருள் சிக்கனம் மற்றும் Co2 போன்ற மாசு ஏற்படுத்தும் காற்றின் அளவுகளையும் , வாகனத்தை டிரைவ் செய்த திறனை வெளிப்படுத்தும் வகையில் சராசரி வேகம், அசிலரேஷன், ஐடிலிங் நேரம் , கியர் தேர்வு மற்றும் பிரேக்கிங் செயல்பாடு உள்பட ஒட்டுநர் வாகனத்தை இயக்கும் பழக்கத்தை அறிந்து கொள்வதுடன், அதிகபட்சமாக 100 மதிபெண்கள் வழங்கப்பட்டு, முந்தைய ஒட்டுதலுக்கும், தற்பொழுது ஒட்டிய நிலைக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதனை மகேந்திரா ப்ளூசென்ஸ் ஆப் அல்லது மஹிந்திரா வெப் போர்டல் வழியாக பெறலாம். மேலும் இதனை பேஸ்புக் , டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பகிரலாம்.

எதிர்பாராமல் வாகனம் விபத்தில் சிக்கினால் காற்றுப்பை திறந்தால் எமெர்ஜென்சி அழைப்புகள் வசதியின் வாயிலாக முன்பே பதிவு செய்து வைக்கப்பட்ட உங்களின் விருப்பமான இருவரின் மொபைல் எண்களுக்கு அவரச செய்தி சென்றடையும்.

மேலும் ஆண்ட்ராய்டு ஆட்டோ எனப்படுவது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படுகின்ற மொபைலை வாகன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் இணைக்க உதவுகின்றது.

எஞ்சின் ஆற்றல் மற்றும் டார்க் போன்றவற்றில் எந்த மாற்றங்களும் இடம்பெறவில்லை. 140 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 330 என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும்  6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்சிலும் விற்பனையில் உள்ளது.

மஹிந்திரா எக்ஸ்யூவி500 ரூபாய் 13.8 லட்சம் விலையில் தொடங்குகின்றது (மும்பை எக்ஸ்-ஷோரூம்)