விரைவில் மஹிந்திரா XUV500 பெட்ரோல் எஞ்சின் மாடல் அறிமுகம்

0

new mahindra xuv500 suvபிரசத்தி பெற்ற மஹிந்திரா XUV500 எஸ்யூவி மாடலில் பெட்ரோல் எஞ்சின் பெற்ற மாடல் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மஹிந்திரா XUV500 பெட்ரோல்

mahindra xuv500 w9 varaint launched

வளர்ந்து வரும் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெட்ரோல் கார் மீதான ஈர்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதனால், அதனை தனது மாடல்களில் பிரதிபலிக்கும் வகையில் மஹிந்திரா நிறுவனம் கேயூவி 100 மினி எஸ்யூவி காரில் பெட்ரோல் எஞ்சினை அறிமுகம் செய்திருந்தது.

விற்பனையில் உள்ள மஹிந்திரா மாடல்களில் இடம்பெற்றுள்ள 2.2 லிட்டர் எம் ஹாக் டீசல் எஞ்சின் பிளாக்கின் அடிப்படையில் 2.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தயாரிக்கப்பட்டு அதிகபட்சமாக 140 ஹெச்பி குதிரைதிறன் மற்றும் 320Nm டார்க் வழங்கலாம் என கூறப்படுகின்து. முதற்கட்டமாக இந்த எஞ்சினில் 6 வேக ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட உள்ளது.

எக்ஸ்யூவி500 மாடலில் டீசல் கார்களுக்கு W என்ற வேரியன்ட் பெயரை பயன்படுத்தி வருவதனால் பெட்ரோல் மாடல்களுக்கு G என தொடங்கும் வகையில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 G9 மாடலை மிகவும் சவாலான விலையில் அறிமுகம் செய்ய உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தகவல் வெளியிட்டுள்ளது.