க்ராஸ்ஓவர் ரக மாருதி செலிரியோ X கார் விரைவில்

மாருதி சுசூகி நிறுவனத்தின் செலிரியோ காரின் அடிப்படையில் க்ராஸ்ஓவர் ரக உந்துதலை பெற்றதாக செலிரியோ X மாடல் மற்றும் மேம்படுத்தப்பட்ட செலிரியோ கார் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

மாருதி செலிரியோ X

விற்பனையில் உள்ள ரெனோ க்விட் கிளைம்பர் , ஃபோர்டு ஃபிகோ க்ராஸ் மற்றும் வரவுள்ள புதிய மஹிந்திரா கேயூவி100 NXT ஆகியவற்றுக்கு எதிராக கூடுதல் அம்சங்களை பெற்றதாக செலிரியோ எக்ஸ் மாடல் வரவுள்ளது.

விற்பனையில் உள்ள செலிரியோ காரில் இடம்பெற்றுள்ள அதே 67 HP மற்றும் 90 NM டார்க் வெளிப்படுத்தும் 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பெற்றதாக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.

தோற்ற அமைப்பில் பம்பர் மற்றும் ரேடியேட்டர் கிரில் போன்றவை மாறுதல்களை பெற்றிருப்பதுடன் பக்கவாட்டில் கிளாடிங் ஆகியவற்றை கொண்டுள்ளது. புதிய மாடலில் VXi, VXi(O), ZXi & ZXi (O) ஆகிய 4 வேரியன்டில் கிடைக்க உள்ளது.

Celerio X VXi

மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்

பாடி நிற பம்பர்கள்

கருப்பு நிற பாடி கிளாடிங் மற்றும் பி பில்லரில் கருமை நிறம் பெற்றுள்ளது.

கருப்பு வீல் கவர்

பகல் மற்றும் இரவு நேர ரியர் வியூ மிரர்

60:40 ஸ்பிளிட் பின்புற இருக்கைகள்

ஹெட்ரெஸ்ட்

மேனுவல் ஏசி

சென்ட்ரல் லாக்கிங்

பவர் விண்டோஸ்

கியர் இன்டிகேட்டர்

ஓட்டுநர் காற்றுப்பை

Celerio X VXi (O)

மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ்

முன்பக்க இரு காற்றுப்பைகள் மற்றும் ஏபிஎஸ்

Celerio X ZXi

பவர் விங் மிரர் உடன் டர்ன் இன்டிகேட்டர்

ஆடியோ சிஸ்டம், சிடி, யூஎஸ்பி மற்றும் ப்ளூடூத் ஆதரவு

கீலெஸ் என்ட்ரி

ஸ்ட்ரியங் மவுன்டேட் ஆடியோ கட்டுப்பாடு பொத்தான்கள்

டில்ட் அட்ஜெஸ்டபிள் ஸ்டீயரிங்

ரியர் விண்டோஸ் டிஃபோகர் மற்றும் வாஸர் வைப்பர்

Celerio X ZXi (O)

மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ

முன்பக்க பனி விளக்குகள்

14 அங்குல அலாய் வீல்

ஓட்டுநர் இருக்கை அட்ஜெஸ்ட்மென்ட்

பாதுகாப்பு அமைப்பு

சமீபத்தில் 2017 மாருதி செலிரியோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து க்ராஸ்ஓவர் ரக கார்களுக்கு இணையான தோற்ற பொலிவினை பெற்ற மாருதி செலிரியோ எக்ஸ் காருக்கு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில் அடுத்த சில நாட்களில் அதிகார்வப்பூர்வமாக விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

மாருதி செலிரியோ X கார் விலை ரூ. 5.10 லட்சம் முதல் ரூ.5.60 லட்சம் வரை அமைந்திருக்கும்.

நன்றி – டீம் பிஹெச்பி

Recommended For You