Site icon Automobile Tamilan

2.5 கோடி கார்களை தயாரித்து மாருதி சுசூகி சாதனை

 

இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் இந்தியாவில் 1983 ஆம் ஆண்டு தொடங்கி தற்பொழுது வரை சுமார் 25 மில்லியன் அல்லது 2.5 கோடி கார்களை தயாரித்துள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு குருகுராமில் தொடங்கப்பட்ட முதல் ஆலயத்தில் மாருதி 800 காரை உற்பத்தி செய்த நிலையில் தற்போது இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் தயாரிப்பாளராக நிறுவனம் விளங்கி வருகின்றது. இந்நிறுவனம் மொத்தமாக தற்பொழுது ஆண்டுக்கு 1.5 மில்லியன் யூனிட்டுகள் தயாரிக்கும் அளவினை கொண்டுள்ள நிலையில்  மாருதி சுசூகி 16 கார்களை இந்திய சந்தையிலும் பல்வேறு மாடல்களை ஏற்றுமதியும் செய்து வருகின்றது. இந்தியாவில் இருந்து 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மாருதி சுசுகி நிறுவனம் தனது கார்களை ஏற்றுமதி செய்து வருகின்றது.

2022 இந்திய மக்களுடன் சுஸுகியின் கூட்டாண்மைக்கு 40 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்த ஆண்டு 25 மில்லியன் ஒட்டுமொத்த உற்பத்தி மைல்கல்லை கடந்துள்ளது, சுஸுகியின் இந்திய மக்களுடனான தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் கூட்டாண்மைக்கு சான்றாகும்” என்று மாருதி சுசுகியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹிசாஷி டேகுச்சி கூறினார். ஹரியானாவின் கார்கோடாவில் ஒரு புதிய உற்பத்தி நிலையத்தை அமைப்பது குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.

Exit mobile version