பண்டிகை காலத்தை முன்னிட்டு மாருதி ஆல்டோ உத்சவ எடிசன் அறிமுகம்

0

maruti suzuki alto 800 utsavஇந்தியாவின் முதன்மையான மோட்டார் கார் தயாரிப்பாளரான மாருதி சுசூகி நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதல் வசதிகளை பெற்ற மாருதி ஆல்டோ உத்சவ எடிசன் என்ற பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மாருதி ஆல்டோ உத்சவ எடிசன்

utsav edition

ஆற்றல் மற்றும் டார்க் ஆகியவற்றில் எவ்விதமான மாற்றங்களும் மேற்கொள்ளாமல் தோற்ற அமைப்பு மற்றும் கூடுதல் துனைக்கருவிகளை மட்டுமே பெற்றதாக க்விட் 02 ஆண்டு விழா எடிசன் மாடலுக்கு ஈடுகொடுக்கும் வகையில் விற்பனைக்கு ரூ.3.94 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ளது.

48bhp ஆற்றலுடன் 69Nm டார்க் வழங்கும் 0.8 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு 5வேக மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் தோற்ற அமைப்பில் பாடி ஸ்டிக்கரிங், ORVM  கவர் கார்னிஷ், புதிய இருக்கை கவர், ரியர் பார்க்கிங் சென்சார், கதவு சீல் கார்டு, கருப்புநிற அப்ஹோல்ஸ்ட்ரி ஆகியவற்றை பெற்றதாக வந்துள்ள இந்த துனைக்கருவிகள் மதிப்பு ரூ.25,000 ஆகும்.

சாதாரண VXi வேரியன்ட் மாடலை அடிப்படையாக கொண்ட மாருதி ஆல்டோ உத்சவ எடிசன் விலை ரூ.3.94 லட்சம் ஆகும்.