Automobile Tamil

40 லட்சம் ஆல்டோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி

maruti alto

கடந்த 16 ஆண்டுகளாக இந்திய சந்தையில் நிலைத்து நிற்கின்ற மாருதி சுசுகி ஆல்ட்டோ 800 காரின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது. மாருதி 800 மாடலுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட்டு தற்போதயை சூழ்நிலைக்கு ஏற்ப பல்வேறு மாறுதல்களை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

இது குறித்து மாருதி சுசுகி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை நிர்வாக இயக்குனர் சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா கூறுகையில், “ மாருதி ஆல்டோ தொடர்ச்சியாக 16 வது ஆண்டாக இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் முதன்மையான காராக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 40 லட்சம் எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளதால் பெருமிதம் கொள்கிறோம்.

இது வேறு எந்தவொரு இந்திய காரும் அடையாத விற்பனை சாதனையாக மாறியுள்ளது. பல ஆண்டுகளாக, ஆல்டோ எங்கள் வாடிக்கையாளர்களுடன் ஒரு வலுவான உணர்வுப்பூர்வ தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாதனையை அனைவருக்கும் அர்ப்பணிக்க விரும்புகிறோம். இந்தியாவின் மிக விருப்பமான காராக மாறுவதற்கான இந்த பயணத்தில் எங்களை நம்பி ஆதரித்தவர்களுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

ஆல்ட்டோ 800 காரின் 800 சிசி என்ஜின் பெற்றுள்ளது. 5 வேக மேனுவல் கியர்பாக்ஸ் மட்டும் பெற்றுள்ள இந்த என்ஜின் அதிகபட்சமாக 48hp குதிரைத்திறன் மற்றும் 69Nm முறுக்குவிசை வெளிப்படுத்தும். இந்த காரின் மைலேஜ் சரிவடைந்து லிட்டருக்கு 22.05 கிமீ ஆக உள்ளது.

Exit mobile version