ரூ.3.80 லட்சத்தில் மாருதி சுசுகி ஆல்டோ VXi+ விற்பனைக்கு வெளியானது

0

Maruti Alto VXi

மாருதி சுசுகி நிறுவனத்தின் குறைந்த விலை காரான ஆல்டோ காரின் VXi+ வேரியண்டில் 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கூடுதலாக இணைக்கப்பட்டு ரூ.3.80 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

Google News

இந்நிறுவனத்தின் ஸ்மார்ட் பிளே ஸ்டுடியோ 2.0 ஆதரவை பெற்ற 7.0 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இணைக்கப்பட்டு ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே இணைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பைப் பொறுத்தவரை, விஎக்ஸ்ஐ + டிரிம் இரட்டை முன் ஏர்பேக்குகள், ஈபிடியுடன் ஏபிஎஸ், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் மற்றும் டிரைவர் மற்றும் கோ-டிரைவர் இருவருக்கும் சீட் பெல்ட் நினைவூட்டலுடன் வருகிறது.

ஆல்டோவை இயக்குவதற்கு பிஎஸ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான 48 ஹெச்பி பவரை வழங்கும், 800 சிசி மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.