மாருதி சுசுகி கார்களின் விலை ரூ.5,000 வரை குறைப்பு

0

2019-Maruti-Suzuki-Alto

சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பினால் மாருதி சுசுகி நிறுவனத்தின், ஆல்ட்டோ 800, ஆல்ட்டோ கே10 உட்பட மேலும் சில மாடல்களின் விலை அதிகபட்சமாக ரூ.5,000 வரை குறைப்பதாக அறிவித்துள்ளது.

Google News

இந்நிறுவனத்தின் பிரபலமான மாடல்களான ஆல்டோ 800, ஆல்டோ கே 10, ஸ்விஃப்ட் டீசல், செலிரியோ, பலேனோ டீசல், இக்னிஸ், டிசையர் டீசல், முந்தைய தலைமுறை  டிசையர் டூர் எஸ் டீசல், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் ஆகியவற்றின் விலை எக்ஸ்ஷோரூம் அடிப்படையில் ரூ.5,000 குறைந்துள்ளது. புதிய விலைகள் செப்டம்பர் 25, 2019 முதல் நாடு முழுவதும் பொருந்தும். கார்ப்பரேட் வரியைக் குறைப்பதற்காக நிதியமைச்சரின் அறிவிப்பின் பின்னணியில் விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும்,  இந்நிறுவனத்தின் மற்ற மாடல்களில் எந்த குறைப்பும் இல்லை.

வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி மாருதி சுசுகியின் எஸ் பிரெஸ்ஸோ மினி எஸ்யூவி விற்பனைக்கு வெளியாக உள்ளது. மேலும், இந்நிறுவனம் மாருதி எர்டிகா அடிப்படையில் 6 இருக்கைகளை பெற்ற XL6 காரை சமீபத்தில் வெளியிட்டிருந்தது.