6.50 லட்சம் பலேனோ கார்களை விற்பனை செய்த மாருதி சுசுகி

0

மாருதி கார்

இந்தியாவின் மிகவும் பிரசத்தி பெற்ற பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களில் ஒன்றான மாருதி சுசுகி பலேனோ விற்பனைக்கு வெளியிடப்பட்ட நான்கு ஆண்டுகளில் 6.50 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் சாலையில் இயங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google News

கடந்த அக்டோபர் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பலேனோ விற்பனைக்கு வந்த நாள் முதலே மிக சிறப்பான வரவேற்பினை இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெற்று வந்த நிலையில், நான்கு ஆண்டுகளில் 6.50 லட்சத்துக்கு அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளதால் மாதந்தோறும் சராசரியாக 14,000 க்கு அதிகமான எண்ணிக்கையை பதிவு செய்து வந்துள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் 6 லட்சம் இலக்கை பலேனோ கடந்திருந்தது.

கடந்த ஜனவரி மேம்பட்ட பலேனோ வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பலேனோ காரில் பிஎஸ்6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த காரில் இடம்பெற்றுள்ள 1.3 லிட்டர் டீசல் என்ஜின் ஏப்ரல் 2020க்கு முன்பாக நீக்கிக் கொள்ளப்பட உள்ளது. பலேனோ ஆர்எஸ் காரில் 1.0 லிட்டர் பூஸ்டர் ஜெட் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

பலேனோ அடிப்படையிலான கிளான்ஸா காரை டொயோட்டா விற்பனை செய்து வருகின்ற நிலையில், பலேனோவுக்கு போட்டியாக ஹூண்டாய் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற கார்கள் விளங்குவதுடன் வரவுள்ள டாடா அல்ட்ரோஸ் காரினை எதிர்கொள்ள உள்ளது.