Home Car News

மாருதி சுசூகி ஈக்கோவில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் இணைப்பு

மாருதி சுசூகி ஈக்கோ கார்

குறைந்த விலையில் அதிகம் இடவசதி வழங்குகின்ற மாருதி சுசூகியின் ஈக்கோ காரில் ஓட்டுநருக்கான ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் உடன் கூடிய இபிடி பிரேக் போன்ற அடிப்படை பாதுகாப்பு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கான ஈக்கோ டூர் வி என்ற வாடகை கார்களுக்கான மாடலிஉம் அடிப்படை பாதுகாப்பு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. புதிய பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்பட்டதன் மூலம் அக்டோபர் 2019 முதல் இந்தியாவில் நடைமுறைக்கு வரவுள்ள கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

மாருதியின் ஈக்கோ கார் சிறப்புகள்

ஈக்கோ காரில் தொடர்ந்து 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு சிஎன்ஜி அல்லது பெட்ரோல் மாடல்களில் விற்பனைக்கு இருக்கிறது.  பெட்ரோல் வேரியன்ட் அதிகபட்சமாக 73 எச்பி பவரையும், 101 என்எம் டார்க் வழங்குகிறது.. சிஎன்ஜி மாடலில் இருக்கும் இதே என்ஜின் அதிகபட்சமாக 63 எச்பி பவரையும், 85 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

5 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் கிடைக்கின்ற ஈக்கோவில் , புதிய வசதிகளாக  இபிடி ஆதரவு பெற்ற ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் ஓட்டுனருக்கான ஏர்பேக் நிரந்தர பாதுகாப்பு வசதிகளாக அளிக்கப்பட்டுள்ளன. கூடுதலாக ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமைன்டர் வசதி, அதிவேகத்தை எச்சரிக்கும் கருவி கொடுக்கப்பட்டுள்ளன.

டாக்ஸி ரக டூர் வி மாடல் முதல் அனைத்து வேரியன்டிலும் நிரந்தர அம்சமாக மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன. மாருதி ஈக்கோ காரின் ஆரம்ப விலை ரூபாய் 3.55 லட்சம் ஆகும்.

 

Exit mobile version